பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

21

வழிகண்ட பெருமையை நினைத்தேன்! என்னை மறந்து 'சோதியே சுடரே' என வாழ்த்தினேன். உனக்கு நினைவுக்கு வருகிறதா? நீ சொல்லும் திருப்பணிகளை நினைக்கும்போது அந்த நாவுக்கரசர் திருவாக்கே முந்தி நிற்கிறது:

“விளக்கினார் பெற்ற இன்பம்

மெழுக்கினால் பதிற்றி யாகும்;

துளக்கில்நன் மலர்தொடுத்தால்

தூயவிண் ஏற லாகும்;

விளக்கிட்டார் பேறு சொல்லின்

மெய்ந்நெறி ஞான மாகும்;

அளப்பில கீதம் சொன்னார்க்(கு)

அடிகள்தாம் அருளுமாறே”

பொன் : நன்றாக இருக்கிறது. அடுத்துள்ள மண்டபத்திற்குச்

செல்வோம்.