பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. முதலிப்பிள்ளை மண்டபம்

பொன் : இது முதலிப்பிள்ளை மண்டபம், முதலிமண்டபம், இருட்டு மண்டபம் என்னும் பெயர்களையுடையது. இதனைக் கடந்தை முதலியார் என்பவர் கி.பி. 1613 இல் கட்டினார்.

கடந்தை முதலியார் சிலை இதோ நிற்கிறது பார். ஒருவர் தம் உடலைக் கல்லைப் போல் வைத்துக் கொண்டு காலமெல்லாம் கடவுளைக் கைகூப்பி வணங்கிக் கொண்டிருக்க முடியாது. 'முடியாது' என்று மனம் அமைதி அடைவது இல்லை. அதற்கொரு வழி கண்டு பிடித்தது ஆற்றல்மிக்க அறிவுள்ளம். அதன் வெளிப்பாடே கற்சிலையாகிக் காலமெல்லாம் கடவுள் முன்னிலையில் கைகூப்பிக் கொண்டிருக்கும் சிற்பவடிவங்கள். கடந்தை முதலியார் சாவா உடம்பி னராய் நம் முன் காட்சி வழங்கிக் கொண்டிருப்பது கலையின் கொடைதானே!

இம் மண்டபத்தின் நீளம் 18 மீட்டர்; அகலம் 7.5 மீட்டர். வழிநடைக்கு இருபாலும் அமைந்த எழிற் சிற்பங்களைப் பார்.

சடை முடியுடன் விளங்கும் இவர் ஒரு முனிவர். மற்றை மற்றைவர்களெல்லாம் எத்தனை அணிகலங் களைப் பூண்டுள்ளனர்! இவரோ எவ்வணிகலனும் பூணவில்லை. 'பற்றற்றான் பற்றினைப் பற்றியவர்க்கு' மற்றைப் பற்று ஆகுமா? ஆகாது என்பதைக் காட்டுகிறது இவர் உடல் தோற்றம். ஆனால், இவர் பார்வையில் பற்றற்றவராகத் தோற்றம் தருகிறாரா! எதிரே காட்சி வழங்கும் மோகினியை முகம் சாய்த்து நோக்கிக் கவ்விக்கொள்ள அல்லவோ துடிக்கிறார்! அந்த மோகினிதான் இந்த முனிவர்மேல் எப்படிக் கண்வலையை வீசுகிறாள்! "அன்ன நடையும் அன்னமிலா ஐயர் நடையும் தளர்வெய்த" மோகினி