பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

23

பார்க்கும் பார்வை, அம்மவோ! முற்றும் துறந்த முனிவரையும் முழு மயக்கத்தில் வைக்காமல் விடுமா? ஒற்றை விரலைக் காட்டி ஒரு பால் கோணிப் பார்க்கும் பார்வை,

“ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ

பேடியர் அன்றோ பெற்றியில் நின்றிடின்”

என்னும் 'மணிமேகலை'க்கு ஒப்பாக அல்லவோ உள்ளது? அவள் அடிக்கீழ் நிற்கும் முனிவர் இருவரும் என்ன தவி தவிக்கின்றனர்! இம் மோகினியை இன்று முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்தப் பிச்சைப் பெருமானை (பிட்சாடனரை)ப் பார். பிச்சைக்குப் போகின்றவராகவா தோன்று கிறார்? பிச்சைக்குச் செல்பவர்க்கு இந்தப் பெருமித நடை வருமா? இரக்கச் செல்பவர்க்கு இந்த எழுச்சி நடை இருந்தால், எவரேனும் மதிப்பாரா? ஆனால், இப்பிச்சைப் பெருமான் பெருமைக்கு இவர் பெரு மிதம் அல்லவோ பேருதவி செய்கின்றது!

வலக் கைகளில் தமருகமும் மானும் தாங்கி, இடக்ை ககளில் திரிசூலமும் திருவோடும் தாங்கிக் காலில் திருவடி பூண்டு விரைந்து அடி எடுத்து வைத்து எங்கே புறப்பட்டு விட்டார்? இவர்தம் விரைவை, எடுத்து வைக்கும் அடிதானா காட்டுகின்றது? ஊன்றி நிற்கும் அடியும் அன்றோ காட்டுகின்றது. இடையில் கோவணமும் இல்லா இப் பெருமான் பாம்பைச் சுற்றிக்கொள்ள மட்டும் மறக்க மாட்டார் போலும்! : பேரருள் உருவாக விளங்கிய காரைக்கால் அம்மையார் அன்றொரு நாள் கேட்டாரே, 'ஐயா, நீ பாம்பைப் பூணாதே; அச்சுறுத்தும் அதனை ஏன் அணிந்து கொண்டு திரிகின்றாய்! மற்றைப் பொழுதுகளில் அணிந்தாலும் அணிந்து கொண்டு போ! ஆனால், பிச்சைக்குப் போகும் போதாவது அதனை அணியாமல் போ' என்று எவ்வளவு மன்றாடிக் கேட்டார். இந்த மன்றாடிப் பாம்பலங்காரர் விட்டாரா?

பொன் : பிச்சைப் பெருமான் பேரழகைக் கண்டு நிற்கும் இந்த நங்கையைப் பார். இவள் தாருகவனத்து முனிவர் மனைவியாம். இவள் கூந்தலின் ஒய்யாரம், ஆலிலை