பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் 31 31ஓ

புதியவர்கள் என்றா நினைக்கின்றாய்! உள்ளூர்க் காரர் எவரும் இல்லை என்றா நினைக்கின்றாய்! நம்மைப் போலத்தானே அவர்களும் வியப்பாகப் பார்க்கின்றனர்.

பொன் : நீ சரியாகவே மதிப்பிடுகிறாய். கேள்; இந்தத் தெப்பக் குளத்தின் நீளம், அகலம், படிக்கட்டு அமைப்பு, அதனைச் சுற்றி நாற்புறமும் அமைந்துள்ள நடைபாதை மண்டபங்கள், அவற்றில் அழகொழுகத் தீட்டப் பெற்றுள்ள வண்ணமலர்கள், வானளாவ ஓங்கித் திகழும் திருக்கோபுரப் பின்னணித் தோற்றங்கள். நீராடி எழுந்து வழிபாடு செய்வார் நேர்த்தி, திருக்கூட்டப் பெருமை இவ்வளவும் ஒன்றற்கு ஒன்று அழகு செய்வதைத் தள்ளிவிட முடியுமா? எல்லா இடங்களுக்கும் இத்தனை பொருத்தங்களும் இணைந்து பெருமை சேர்க்குமா?

கண்

நீ சொல்வது சரிதான். மீனாட்சி நாயக்கர் மண்டபத்தின் விரிவு இன்பமானது என்றால், இத் திருக்குளத் தோற்றம் இன்னும் இன்பமானதுதான்.

பொன் : இது பொற்றாமரைக் குளம் அல்லவா! அதோ பார்! தங்கத் தாமரை! இதன் பெயரை நிலைநாட்ட விரும்பிய திருப்பனந்தாள் மடத்துத் தலைவர் இப்பொற்றா மரைப் பூவை இத் திருக்குளத்தில் மலரச் செய்துள்ளார். : அப்படியா!

கண்

பொன் : இந்த வடக்குச் சுவரில் எல்லாம் திருவிளையாடல் ஓவியங்கள்; கிழக்குப் பகுதியும் அப்படித்தான்; மதுரைத் திருவிளையாடல்களையெல்லாம் இனிய காற்றை வாங்கிக் கொண்டே எளிதில் அறிந்து கொள்ளச் செய்துள்ள ஏற்பாடு கண்ணைமட்டும் அல்லாமல் கருத்துக்கும் விருந்தாவதாம். மேலே பார்! எல்லாம் வண்ண வண்ணத் தாமரைப் பூக்கள். எண்ணத்தில் மலர்ந்த பொற்றாமரைக் குளத்தின் நறுமணக் கலவைதான்!

கண்

'தாமரைக்குளம்' என்னும் ஊரை நாம் அறிவோம். 'குளத்துக்கு அணியென்ப தாமரை' என்பதையும் அறிவோம். ஆனால், பொற்றாமரைக்கும் இக்குளத் திற்கும் என்ன தொடர்பு?