பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

29

பொன் : சொல்கிறேன்; இந்திரன் ஒரு கொலைப்பாவத்திற்கு ஆளானான். அதனைப் போக்கிக்கொள்ள எங்கெங்கோ அலைந்தான். இறுதியில் இங்கு வந்தான். அப்பொழுது இவ்வூர் கடம்ப வனமாக இருந்தது. கடம்பவனத்திடையே இந்திரன் இலிங்கப் பெரு மானைக் கண்டான். அவ்வளவில் அவன் பாவம் அகன்றது. இறைவனை வழிபட எண்ணித் தேவருலகில் இருந்து வேண்டும் பொருள்களைக் கொண்டு வந்தான். ஆனால், நறுமண மலர்கள் அந் நல்லுலகில் இல்லையே! அதனால் இந்திரன் கவலை பெரிதாயிற்று. அதனை உணர்ந்த பெருமான் அருகில் இருந்த பொய்கையில் அழகும் மணமும் கூடிய பொற்றா மரை மலரை மலரச் செய்தான். இந்திரன் அதனைப் பறித்து வழிபாடு செய்து இன்புற்றான். அது முதல் பொற்றாமரைக்குளம் எனப் பெயர் கொண்டது. இத் திருவிளையாடல் கதைக்குச் சான்றாகச் செய்தது இக் குளமாகும்.

கண்

தெப்பக் குளத்தில் இறங்கிக் கால் கைகளைக் கழுவிக் கொள்ளலாம் வா.

பொன் : சரி; போவோம். தெப்பக்குளத்துள் இறங்கும் இந்த வடக்கு மைய வழியில் எடுப்பாக அமைந்துள்ள இச்சிலைகளைப் பார்த்தாயா?

கண்

கிழக்கு நோக்கி நிற்கும் இவன் ஒரு வேந்தன் எனத் தெரிகின்றது.எதிரே மேற்கு நோக்கி நிற்பவன் எவன்? அவன் தலையிலும் திருமுடி இருக்கின்றது. ஆனால், அரசன் முடிபோல் இல்லை. இதில் ஏதாவது வரலாறு உண்டா?

பொன் : ஆம்; உண்டு. இவன் பாண்டி வேந்தன்; குலசேகர பாண்டியன் என்பது இவன் பெயர். இவன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்தான். அந்நாளில் மதுரைமாநகர் இல்லை. இது கடம்பவனமாக இருந்தது. எதிரே நிற்கின்றானே அவன் ஒரு வாணிகன். தனஞ்செயன் என்பது அவன் பெயர். அவன் வாணிகம் செய்வதற்காக வந்து இவ்வழியே திரும்பினான். திரும்பிய போது இருட்டாகி விட்டது. ஆதலால் இக் கடம்ப வனத்திலேயே தங்கினான். இரவுப் பொழுதில்