பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

33

பெருமாள் என்பவரால் கட்டப்பெற்றன; கிழக்குப்புற மண்டபமும் படிக்கட்டுகளும் கி.பி. 1573இல் குப்பையாண்டி என்பவரால் கட்டப்பெற்றன.

தெற்குப் புற மண்டபமும் படிக்கட்டுகளும் கி.பி. 1578 இல் அப்பன்பிள்ளை என்பவரால் கட்டப்பெற்றன. மேற்குப்புற ஊஞ்சல் மண்டபம் முதலியவற்றை கி.பி. 1563 இல் செட்டியப்ப நாயக்கர் என்பவர் கட்டி யதாகத் தெரிகின்றது.

மகிழ்ச்சி; இத் திருப்பணியாளர் புகழ் வாழ்வதாக! தென் பக்கம் போகலாம்.

பொன் : ஏட்டிலே இருந்த திருக்குறளை இங்கே அழகான வண்சலவைக் கல்லில் கண்டு களிக்கின்றோம். இந்தத் திருப்பணி பற்றிய குறிப்பைப் பார்!

"திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் காசிவாசி அருள் நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களால் ரூ 15,000 செலவில் 45 சலவைக் கற்களில் 1330 குறட்பாக்களும் எழுதப்பெற்றுத் திருக்குறள் அரங்கேறிய மதுரையில் பொற்றாமரைத் தீர்த்தக் கரையில் அமைக்கப்பெற்றன. துன்முக சித்திரை ஞாயிறு 17 s 22-4-56".

இதனை அடுத்து மதுரைத் தேவாரம், சிவஞான போதம், அபிராமி அந்தாதி ஆகியவற்றைச் சலவைக் கல்லில் பொறித்ததும் வ்வாதீனப் பணியேயாம்.

கண்

எத்தனையோ பேர்கள் 'பொழுது போகவில்லை' 'பொழுது போகவில்லை' என்று பொழுதைப் போக்குகிறார்கள். அவர்கள் பொழுது இருக்கும் போது இங்கே வந்து பொழுதைச் செலவிட்டால் எவ்வளவு அரிய பயனைப் பெறலாம். கைம்மேல் வைத்த கனியை உண்பதற்குமா கருதக் கூடாது?

க்

பொன் : கண்ணப்பா, கொஞ்சம் பொறு. இந்த வெள்ளைக் காரனுக்கு இக் கல்வெட்டைப் பற்றி ஒருவன் சொல்லிக் கொண்டு போவதைக் கேட்டாயா?

கண் : என்ன?

பொன் : "இது திருக்குறள்; குமரகுருபரர் என்பவர் எழுதியது."