பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சிவந்தீசுவரர் கோயில்

பொன் : பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலைக்கு வந்துள்ளோம். இது தெற்குக் கோபுர வாயில்வழி. இவ்விடத்தில் 'அப்பனை' நினைத்து ஒரு கும்பிடு போட வேண்டும்' என்று ஓர் உள்ளம் எண்ணியிருக் கின்றது. அதனால் இலிங்கப் பெருமானை இங்கே எழுந்தருளச் செய்துள்ளனர். இவ் வாயிலிலே இறைவன் திருக்கூத்தாடும் சிலைகளை நிறுத்தி அறிமுகம் செய்துள்ளார்கள்.

கண்

நாம் அம்மைக்கு முதன்மை கொடுத்தாலும், அம்மை, அப்பனுக்கு முதன்மை கொடுக்கத் தவறுவாளா? உலக நடை இதுவென உலகுக்குக் காட்டாமல் காட்டுபவள் அவளாயிற்றே!

பொன் : இதோ பார்! ஒரு நல்ல ஏற்பாடு; வில்வக் கன்றுகள் வளர்க்குமிடம்; திருக்கோயில்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகக் கன்றுகள் இங்கே வளர்க்கின்றனர்.

கண்

வளமான காடுகளின் இடையே திருக்கோயில்கள் பழங்காலத்தில் இருந்தன. பின்னர்க் காடுகளை அழித்துக் கோயிலும் கோட்டையும் குடியிருப்பும் பெருக்கினர். இதற்குக் கடம்பவனமாகிய இ மதுரையே சான்று. மீண்டும் மரங்களைப் பெருக்கி நலம் செய்ய வேண்டும் என்பதற்கு இவ் விளம்பரம் தூண்டுதல். இவ் வில்வம் போலவே பலவகைப் பூச் செடிகளுக்கும், உயர்ந்தவகைப் பழமரங்களுக்கும் திருக்கோயில் வளாகமே நாற்றங்கால் என்னும் நிலைமை ஒவ்வொரு கோயிலிலும் உண்டானால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இன்ன கோயிலிலே வாங்கியது என்னும் தெய்வ உணர்வுடன் போற்றிக் காத்துப் பயன் கொள்ளும் பேறும் கிடைக்குமே! தண்ணீர் ஊற்றும் போதும், உரம் போடும் போதும்,