பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஊஞ்சல் மண்டபம்

பொன் : இதற்கு ஊஞ்சல் மண்டபம் என்பது பெயர். ஆறு தூண்களைக் கொண்ட இந்த அழகான கருங்கல் மண்டபம் தனிக்கோயில் போல விமானத்துடன் அமைந்துள்ளது. இதனுள் ஊஞ்சல் தொங்குகின்றது அல்லவா! வெள்ளிக்கிழமை தோறும் இவ்வூஞ்சலில் இறைவன் இறைவியர் திருவுருவங்களை வைத்து ஊஞ்சலாட்டுவர். இதற்கு எதிரே தெப்பக் குளத்தின் உள்ளே நீண்டு செல்லும் மண்டபம் இருக்கின்றதே, இதில், இங்கே ஊஞ்சலாட்டம் நிகழும் போது ஆடல் மகளிர் ஆடல் நிகழ்த்துவர். ஆதலால் 'ஆடல் மண்டபம்' என்பது இதற்குப் பெயர். ஆனால், இப்பொழுது ஆடல் நிகழ்வது இல்லை.

கண்

ஆட்ட ஓட்டம் ஓய்ந்தாலும் சரி; அதன் பழைய வரலாற்றை அதன் பெயர் எப்படிக் காப்பாற்றுகிறது பார்த்தாயா? ஆதலால், பழம்பெயரை மாற்றாமல், மறையாமல் போற்றுவது வரலாற்றுக்குச் செய்யும் உதவியாகும்.

பொன் : இந்த நிலைமாடத்தின் முகட்டில் உள்ள ஓவியங்கள் மங்கம்மாள் காலத்தில் வரைந்தவை. இராணி மங்கம்மாள், அவர் பேரர் விசயரங்க சொக்கநாத நாயக்கர், அமைச்சர் இராமப்பையன் ஆகியோர் ஓவிய வடிவங்கள் இவை. இதனைக் கட்டி முடித்தவர் செட்டியப்ப நாயக்கர் என்பதை முன்னமே சொன்னேனே! அவர், இச்சிலைவடிவில் நிற்பவரா கலாம்! அவருக்கு அன்னையை எந்நாளும் அண்மை யில் நின்று வழிபட்டுக் கொண்டிருக்கும் ஆர்வம் மீதூர்ந்துள்ளது. அதற்குத் தக அன்னை திருவுருவை எழுந்தருளச் செய்து தாம் வணங்கிக் கொண்டே