பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

39

இருக்க வாய்ப்புச் செய்து கொண்டதுடன், வழிவழி வருவாரும் வணங்கும் பேறு பெறவும் வாய்ப்புச் செய்துள்ளார்! இத்தகையர் பெயர்களையாவது எழுதிவைத்தால் எவ்வளவு நலமாக இருக்கும்!

நல்லதை நினைக்கும் போது நல்லவரையும் நினைக்க வாய்ப்புக் கிடைத்திருக்குமே எழுதி வைத்திருந்தால்! இப்படி ஓரிடம் தானா? எத்தனை இடங்களில் என்னென்னவோ எழுதி வைத்திருக்க வேண்டும்!

பொன் : இந்த நிலைமாடத்தின் கீழே இறங்கலாம். இங்கே இலிங்கப்பெருமான் நடுநாயகராக இருக்கின்றார். அவருக்கு வலப்பால் மூத்த பிள்ளையாரும் இடப் பால் இளைய பிள்ளையாரும் இருக்கின்றனரா? தெப்பக் குளத்தில் நீராடித் திருநீறு துலங்க வருவார்க்கு முந்திக்கொண்டு அருள் வழங்க இம் மூவர் உருவையும் படிக்கரையிலேயே படைத்துள்ளனர். இவர்களுக்கு நிழல்செய்யும் நிலைமாடமும் எழுப்பியுள்ளனர். நாம் இவர்களை வணங்கி விடைபெற்றுக் கொண்டு மேலே போகலாம்.

கண்

ஊஞ்சல் மண்டபத் தூண்களில் பெரிய சிற்பங்கள் எதுவும் இல்லை. சிறிய சிறிய வேலைப்பாடுகள், ஆனால் சிந்தனையைத் தூண்டுபவையாக உள்ளன. அவ்வளவும் வழிபாட்டு முறையை வெளியிடுபவை.

பொன் : ஆண்டவனை எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என்பதைக் கல்லிலே கருதிக் கருதிப் படைத்துக் காட்டியுள்ளனர்; உச்சித் தலைமேல் கை வைத்துக் கும்பிடுபவர்; நெஞ்சுக்கு நேரே கை தூக்கி வணங்குபவர்; வலக்காலைத் தூக்கி மடித்து நின்று வணங்குபவர்; இடக்காலைத் தூக்கி மடித்து நின்று வணங்குபவர்; சடைத் தலையராய் வணங்குபவர்; மொட்டைத் தலையராய் வணங்குபவர்; பாகைத் தலையுடன் வணங்குபவர்;திருமுடி திகழ வணங்குபவர்; வில்லேந்திய தோளராய் வணங்குபவர்; விம்மித உருவாய் வணங்குபவர்; விழுந்து வணங்குபவர்; மண்டியிட்ட கோலத்தில் வணங்குபவர். ஆடும் அழகியாய்ப்