பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கண்

ளங்குமரனார் தமிழ்வளம் - 31

31 ஓ : ஆமாம்! ஆனால் சிற்பம், ஓவியம், சைவம், கட்டிடப் பொறி, இசை, வரலாறு, கல்வெட்டு, இலக்கியம் முதலியவற்றிலெல்லாம் தேர்ச்சிமிக்க ஒருவர் அல்லது ஒரு குழுவினர் நுணுக்கமாக முழுதுற ஆய்ந்து ஒவ்வொரு பகுதியையும் நிழற்படமெடுத்து அதனுடன் நூலாக வெளியிட்டால் பெரும்பயன் மிக்க செய லாகும். அப்படி வெளிவரும் நாளில் நாம் இன்னும் தெளிவு பெறலாம்.

பொன் : கண்ணப்பா, இந்த மண்டபத்தில் உள்ள தூண் களைப் பார். அவ்வளவும் சிற்பத்திறன் மிக்கவை. நடைவழிக்கு இருபாலும் சிற்பக் காட்சி நிலையமாக அமைந்துள்ளன. இங்கே, கிழக்குப் பார்த்து அருச்சுனன் நிற்கின்றான். அவனுக்கு நேரே மேற்குப் பார்த்துத் தருமன் நிற்கின்றான். இருவரும் வில்லாளிகளாகவே நிற்கின்றனர்.

கண்

தருமன் அமைதிக்கு இருப்பிடமானவன் என்ற எண்ணம் அவன் பெயரைக் கேட்ட அளவிலும் நமக்கு உண்டாகின்றது. இந்த அருச்சுனனும் அத்தகையவன்

தானா?

பொன் : அண்ணன்முன் நிற்கும் அருச்சுனன் எப்படி நிற்பான்? அவனுக்கு ஏற்ற தம்பியாக விளங்குகின்றான்.

கண்

தருமனுக்குத் தாடி உண்டு என்பது இச்சிலையைப் பார்த்தால் தெளிவாகின்றது. மேலும் வடிந்துவீழ் காதும் உண்டு என்பதையும் காட்டியிருக்கின்றான் கலைஞன்.

பொன் : வண்ண வண்ணப் பூஞ்செடிகளை மாறி மாறி நட்டு வைக்கும் தோட்டக் கலைஞன் போல, இச் சிற்பக் கலைஞனும் இடை இடையே யாளிகளைத் தூணில் செதுக்கியுள்ளான்.

அடுத்துள்ள இரண்டு தூண்களில் நகுலன் கிழக்குப் பார்த்து நிற்கின்றான்; அவனுக்கு எதிரே சகாதேவன் மேற்குப் பார்த்து நிற்கின்றான். நகுலன் கீழ்நோக்கிச் சிந்தனை தேக்கி நிற்கின்றான். சகாதேவன் மேல் நோக்கிச் சிந்தனை தேக்கி நிற்கின்றான்.