பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் -31

இருந்த காலைப் பற்றிக்கொண்டது. ஒரு கால் கடந்ததை வீமன் காட்டி வழக்கிட்டான். ஒரு கால் காட்டுள் இருந்ததைக் காட்டி மனித விலங்கு வழக் கிட்டது. முடிவாகவில்லை. "நாம் பேசித்தீர்க்க முடியாது. வா: உன் அண்ணன் தருமனிடம் நீதி கேட்போம்" என்று மனிதவிலங்கு அழைத்துச் சென்றது. தருமன் வழக்கைக் கேட்டான். தம்பியின் பாசம் ஒருபக்கம், அறம் ஒருபக்கம்; அறத்திற்காகத் தம்பியைப் பலியிடுவதா? தம்பிக்காக அறத்தைப் பலியிடுவதா? "மனிதவிலங்கே உன்வாக்குப்படி இவன் காட்டைக் கடந்துவிடவில்லை; பாதி கடந்தாலும் கடவாமையேயாம். ஆதலால் இவனைக் கொல்லலாம்” என்றான். மனித விலங்கு வியந்தது. "தருமா! நீயே அறிவோன்; நீதியின் காவலன்' என்று பாராட்டி 'உன் நேர்மைக்கு பரிசாக இவனைக் கொல்லாமல் விடுகின்றேன்" என்று விடைபெற்றுப் போனது. இதற்குத்தான் ‘தருமசங்கடம்' என்னும் பழமொழி நாட்டில் எழுந்தது.

சரி, இந்தச் சிலைகளை இங்கே நிறுத்தி வைத்ததன் நோக்கம் என்ன? பலிபீடத்தின் இப்பாலும் அப்பாலும் இவற்றை நிறுத்தி வைத்தது வருவார் கருத்தைக் கவர்ந்து ஓர் உறுதிப் பொருளைக் கற்பிப்பதாக இருக்கவேண்டும்.

பொன் : தீமையைப் பலியிட்டு நன்மையைப் பெருக்கப் போகின்றாயா? நன்மையைப் பலியிட்டு தீமையைப் பெருக்கப் போகின்றாயா? மறத்தைப் பலியிட்டு அறத்தை வளர்க்கப் போகின்றாயா? அறத்தைப் பலியிட்டு மறத்தை வளர்க்கப் போகின்றாயா? அடங்காமையைப் பலியிட்டு அடக்கத்தைப் போற்றப் போகின்றாயா? அடக்கத்தைப் பலியிட்டு அடங் காமையைப் போற்றப் போகின்றாயா? நடுவு நிலை மையைக் காப்பதற்காக நயத்தக்க தம்பியையும் பலி கொடுக்கத் துணிந்தானே தருமன்! இவனைக் கருத்தில் வைத்துக் காலடியை இங்கே எடுத்து வை! இதனை வலியுறுத்துவதற்கே இவற்றை இங்கே நிறுத்தினார்கள் போலும்!