பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

45

பலிபீடம் என்பதை ஆடு கோழி பலியிடும் இடம் என்று சிலர் கருதுகின்றார்களே! நீ என்ன நினைக் கின்றாய்?

பொன் : 1 “பற்றாய நற்குரு பூசைக்கும் நன்மலர்

மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்"

என்று மந்திரமொழி முழங்கும் இடத்தை உயிர் கொலைக்கு இடமுண்டா?

கண்: 2 “பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்”

என்பதில் 'பூப்பலி' என்னும் விளக்கம் உள்ளபோது தெளிவு ஏற்படத்தானே வேண்டும்? பூப்பலியிட்ட இடத்தைப் புலைப் பலியிடமாக ஏன் கருத வேண்டும்? பொன் : இந்த வீமன் திருமுகத்தைப் பார்த்தாயா? திருவளர் தாமரை என்பார்களே எந்த முகத்தை? களங்கமிலா நகை முகத்தைத் தானே! இந்த வீமன் முகத்தில் சிற்பியால் எப்படித்தான். இப்படி முழுநகையைக் காட்ட முடிந்ததோ? கல்லும் சிரிக்குமா? கால மெல்லாம் சிரித்துக்கொண்டிருக்கச் செய்துள் ளானே சீரிய சிற்பி!

கண்

வீமனுக்குள்ள இயற்கைத் தோற்றமா இது? போரொன்று கிடைத்தது என்னும் பூரிப்பா? வீறு மிக்க உள்ளத்தின் வெற்றிக்களிப்பா? நடுவு நிலை பிறழா நல்லோனுடன் பிறக்கக் கொடுத்து வைத்தவன் நான் என்னும் பெருமிதமா?

எதுவானால் என்ன? இவன் நகைமுகம் பகை முகத்தையும் பண்பால் ஈர்த்துக்கொள்ளும் என்பது உறுதி. நம்மைப் பதிலுக்கு நகைக்காமல் இருந்தால் நாகரிகம் இல்லை என்று நயமாகக் கூறுகின்றதே இந்த உயிர்ச்சிற்பம்! வீமா, உன்னை எவன் கண்டான்? இந்தச் சிற்பியைப் போல!

பொன் : கண்ணப்பா, போதும்; நடப்போமா? தெற்கே திரும்பு. இது சித்தி விநாயகர் கோயில். அடியார் நினைத்த வற்றை நிறைவேற்றி வைக்கும் விநாயகர் சித்தி

1.திருமந்திரம். 97.

2.சிலப்பதிகாரம். 24 : 1; 19