பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

47

ஆனால், இவையெல்லாம் நாம் காணும் வாலி இயல்புகள்; கம்பன் கண்ட வாலி இயல்புகள் இல்லை. பொன் : கம்பன் கண்ட காவிய வாலிக்கும் இவ் வாலிக்கும் தொடர்புள்ளதா? அது தெரியாதே?

கண்

கதலிப்பழத்தை ஊடுருவிச் செல்லும் ஊசிபோல வாலியின் மார்பை இராமபாணம் துளைத்தது. அதனைப் புறம் போகவிடின் உயிரும் போமென வாலி கையால் பற்றி நிறுத்திக் கொண்டான். இராமபாணத்தைத் தடுத்து நிறுத்திய வாலியின் ஆற்றலை நினைத்து அமரரும் திகைத்தனர்! மார்பில் பாய்ந்த கணையைப் பற்றிப் பிடித்துக் கொண்டே வாலி பலப்பல நினைத்தான்; பின்னர்ப் பறித்து வைத்துக் கொண்டு "நல்லறந் துறந்தாய்" என்று நகைத்துப் பேசினான். சுக்கிரீவன் "நேசத்தாரைகள் சொரிய" நின்றான்! இக் கம்பன் காட்சியை நினைத்துக் கொண்டே வாலி மார்பில் கை வைத்திருத்தலைக் கருதினால் எவ்வளவோ பொருள் அடங்கியிருத்தல் புலப்படும்.

பொன் : அடுத்து இருப்பவள் பாஞ்சாலி. இவள் தோற்றம் அருச்சுனனை மயக்கியதில் வியப்பில்லை; ஐவரையும் சேர்த்து மயக்கியதிலும் வியப்பில்லை; இங்கே வருவார் அனைவர் உள்ளத்தையும் கவருமாறு சிற்பம் வடித் திருக்கின்றான் சிற்பி.

கண்

ஐந்து தட்டு அரவத் திருமுடி இவளுக்கு ஐவரும் தனித் தனி சூட்டினரோ?

பொன் : இவளுக்கு எதிரே கூனிக்கொண்டு கோணற் பார்வை பார்க்கின்றானே! இவன் முக்கால் அடிக்குக் குறை யாமல் தொங்கும் மீசையைத் தடவிக்கொண்டு இருக்கின்றானே! ஒருகண் சற்றே ஏற, ஒருகண் சற்றே இறங்க உட்சிரிப்பை உதட்டில் வெளிப்படுத்திக் கொண்டு என்ன நினைக்கின்றான்? தன் மீசையைத் தடவும் வேலையே இவனுக்குச் சரியாக இருக்கும்.

கண்

இப்படி எத்தனைபேர் உலகில் இருக்கின்றார்கள்! அவர்களுக்கு ஒரு முன்னோடி வேண்டாவா?