பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

49

'பெருமாள்' கோயிலில் தான் இவர்கள் உருவங்களைப் படைத்துப் போற்றுவர். இங்கே 'பெருமான்' கோயிலில் இடம் பெற்றது ஏன்?

பொன் : நல்ல வினா எழுப்பினை! நான் சொல்லியிருக்க வேண்டும். மறந்து விட்டேன். நாம் இக் கோயிலுக்கு வரும் வழியில் ஒரு கோபுரத்தைச் சுட்டிக்காட்டிக் கூடலழகப் பெருமாள் கோயில் என்றேன். முன்னாளில் இச் சொக்கர் கோயிலுக்கு வடபால் கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் என்னும் ஒரு கோயிலும் இருந்தது. அக் கோயில் அழிந்துவிடவே அங்கிருந்த அருமையான இக் கலைச் செல்வங்களும் அழிந்து போகா வண்ணம் தூண்களைப் பெயர்த்து வந்து, இம் மண்டபத்தை எழுப்பிக் கலைமாளிகை யாக்கிவிட்டனர். ஆதலால்தான், இக் கோயிலில் இவற்றைக் காணும் பேற்றை நாம் பெற்றுள்ளோம். இத் திருப்பணி செய்தவர் அபிடேக பண்டாரம், திம்மப்ப நாயக்கர், செட்டியப்ப நாயக்கர் என்போர் ஆவர்.

கண்

'அரியும் சிவனும் ஒண்ணு' என்பது நாட்டுப்புற மொழி. சிதைந்த கோயில் சிலைகளைக் கொண்டு அச் சீரிய கொள்கையை நிலைநாட்டிய நல்லவர்கள் நம் நினைவுக்கு உரியவர்.