பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அம்மை திருமுன்

பொன்: இத் திருவாயில் காவலர் இருவருள் வடக்கே இருப்பவர் வடக்கே பார்க்கின்றார். தெற்கே இருப்பவர் தெற்கே பார்க்கின்றார். ஒருவர் வருபவர் எப்படி அடிமைத்திறம் பூண்டு வருகின்றார் என்பதைப் பார்க்கின்றார்; மற்றொருவர் போகின்றவர் எப்படி அம்மையை வணங்கிய பூரிப்புடன் போகின்றார் என்பதைப் பார்க்கின்றார்.

கண்

இன்னும்

சொன்னால் முன்னழகை ஒருவர்

பார்க்கின்றார். பின்னழகை ஒருவர் பார்க்கின்றார். இரண்டு பேருமே புற அழகைப் பற்றிக் கருதாமல் அக அழகையே நோக்குகின்றனர்!

பொன் : அன்னை அங்கயற் கண்ணியின் முன்னர் நின்று ஆடியும் பாடியும் வீழ்ந்தும் விம்மியும் உருகியும் கண்ணீர் பெருகியும் எத்தனை எத்தனை கோடிப் பேர் அருள் பெற்றார்களோ! இன்னும் பெற இருக்கிறார் களோ! இந்த உணர்வுடன் நாம் உள்ளே காலடி எடுத்து வைக்கும் போதே, காணாத இன்பம் கண்டடைந்த பேற்றால் களிப்படைகின்றோம். இந்தச் சிலையில் நிற்கும் அடியார், அடியார்க்கு அடியாராய் வருவார்க்கு வணக்கம் தருகின்றார். இந்த நங்கை சாமரம் வீசி வரவேற்கின்றாள்,

கண்

இவ் வரவேற்பு 'கரும்பு தின்னக் கூலி தருவது' போன்றது என்னலாம்.

பொன் : தங்கக் கொடி மரத்தைப் பார். கொடிமரத்தைக் கம்பம் என்போமே. இதுவும் கொடிக்கம்பம்தான். திருவிழாத் தொடங்கினால் நிற்கும் இத்தகைய மண்டபம் 'கம்பத்தடி மண்டபம்' என்பர். இதனைச் சொக்கர் முன்னும் காணலாம்.

படம்