பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

51

அம்மன் கோயில் இரண்டாம் திருச்சுற்று இது. இதில் தென் கிழக்கு மூலையில் திருப்பணியால் அழியா வாழ்வு கொண்ட திருமலைமன்னர் நின்று கும்பிட்ட கையுடன் கோலம் கொண்டுள்ளார். இவரை அடுத்து இவர் தம் அறக்கட்டளை அறை உள்ளது. அம்மையின் திருவருளை நாடி ஆர்வத்துடன் நிற்பது மட்டு மல்லாமல் அம்மைக்குச் செய்யும் அறங்கள் முட்டுப்பாடு இன்றி முறையாக நடைபெறுகின்றன வா என்பதையும் கண்காணிக்கிறார்! சலவைக் கல்லால் கட்டப்பெற்ற இது கொலுமண்டபம். ஒன்பான் இரவு (நவராத்திரி) விழாவின் போது ங்கே கொலு வைக்கப் பெறும்.

இத் திருச்சுற்றின் இத் தென்மேற்கு மூலையிலே பார். மூத்த பிள்ளையார் உள்ளார். இரட்டைப் பிள்ளை யார்கள் இவர்கள்: தெற்கே இருப்பவர் உச்சிட்ட பிள்ளையார். வடக்கே இருப்பவர்

பிள்ளையார்.

கூத்தப்

கண் : இஃது என்ன? உச்சிட்ட பிள்ளையார்; பொன் : இதனைத்தான் சிற்பியே காட்டியுள்ளாரே! பிள்ளை யார் ஒரு மங்கையை அணைத்துக்கொண்டு இருக்க வில்லையா? அவளை முத்தமிட்டிருக்கிறார். முத்த மிட்டால் 'உச்' என்னும் ஒலி உண்டாகுமே! அதனால் உச்சிட்ட பிள்ளையார் ஆகிவிட்டார். அடுத்தவரோ கூத்தாடும் கோமானாக விளங்குகிறார்.

கண்

சித்தி என்பது எடுத்த செயலில் வெற்றி; அதனை அருள்பவர் சித்தி விநாயகர்; புத்தி என்பது அறிவு அல்லது ஞானம். அதனை அருள்பவர், 'புத்தி விநாயகர்;'இச் சித்தி புத்திகளைப் பெண்களாக்கி அவர்களுக்குப் பிள்ளையாரை மணவாளராக்கிய பின் உச்சிட்ட பிள்ளையார் ஆவதில் வியப்பில்லையே! பொன் : இந்த வடமேற்கு மூலையில் கோயில் கொண்டவர் முத்துக்குமரர். வள்ளி தேவசேனை உடனாகிய ஒருவராய் விளங்குகிறார். "பொருப்பது பொடிபட விடுத்திடு கைவேலா இருப்பிடம் உனக்கு எது?” என வினாவித் "திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம்" என அவன் விடை அருள்வதாகக் கூறிய அருணகிரியார் பாடிய இன்னிசைப் பாடல்கள் இங்கே சலவைக் கல்லில் வெட்டி வைக்கப்பட்டுள்ளன.