பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

எட்டமுடியாக் கலைச் செல்வத்தை எட்டிப்பிடித்த அந்தப் படைப்பாளி 'எட்டு' என்று ஏவுவது போல் படைத்தானே! அதனைப் பாராட்டவேண்டும்.

பொன் : ஆம்! எண்குணத்தானை

கண்

எண்ணி எண்ணித் திளைத்து அவள் திருவாடலில் தோய்ந்த உள்ளம் எண்' தூணைப் படைத்து எண்ணரும் பொருளை எண்ணு' என்று ஏவிற்றே அதையும் எண்ணிப் பாராட்டலாம்.

அம்மைக்கு எண்சத்தி (அட்டசத்தி) மண்டபம் கண்டது, இந்த அப்பனுக்கு எண்கால் மண்டபம் கண்ட படைப்பின் பயனே என்பதையும் எண்ணி மகிழ வேண்டும்!

பொன் : தென் பக்கத்தின் முதல் தூணின் கிழக்குப் பக்கத்தில் அழகு விளங்க அமைந்த காட்சியைக் காண்! இஃது என்ன கோலம்!

கண்

அம்மையின் திருமணக் கோலம்தானே! கோனாட்சி செய்தவள் இம் மீனாட்சி! இங்கே தேனாட்சி செய்கிறாள்! என்ன தெவிட்டாத இன்பக் காட்சி! பொன் : தெய்வப் பெண்ணரசியாகியவர்; திக்கெல்லாம் வென்ற திறமிக்க வீரத் திருவினர்; ஐயோ! மணக்கோலம் கொண்டவுடன் என்ன நாணம்! என்ன நாணம்! நாணப் புன்னகை எப்படி நளினமாக விளையாடுகிறது!

கண்

படக்கருவியால் படம் பிடித்துக் காட்டினால் கூட இப்படி அமையுமோ என்னவோ! அப்படி இயற்கையாய் அமைந்துள்ளது!

பொன் : முழுமுதல் இறைவன் திருக்கையைப் பிடித்த பெருக்கு வகை இப்படி இதழ்க் கடையில் விளையாடுவதைக் காணக் காணப் பேருவகைதான்! நமக்கே இவ்வளவு உவகையானால் அந்த அம்மை உடன்பிறந்து தம் கடனை இனிது முடிக்கக் காத்திருக்கும் பெரு மாளுக்குப் பேருவகை வாராமல் இருக்குமா? பெருமாள் உவகையை அருமையாக வெளிப்படுத்திய சிற்பக்கோமான் சிவபெருமானை எதுவுமே நடவா தவர் போலச் 'சிவனே' என்று இருக்கப் படைத்திருக் கிறானே!