பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

61

பொன் : ஆம்! அப்படிச் சொல்லவும் வேண்டுவதே. ஏனெனில் தவக்கோலம் கொண்டவரை மணக்கோலம் கொள்ள வைத்தவர் அன்னை மீனாட்சி ஆதலால்.

கண்

சரி; மணக்கோலம் இங்கே இருக்கப் பள்ளியறை அம்மை திருமுன்னே இருக்கிறதே!

பொன் : அரசன், அரசியைத் தேடி அந்தப்புரத்திற்குச் செல் வானே அன்றி, அரசி அரசனை நாடி அரண்மனைக்கு வரமாட்டாளே! ஒரு சிற்றரசுக்குரிய இந்த முறை இப்பேரரசுக்கு மட்டும் இல்லாமல் போகுமா?

கண்

நிறையப் பேச வேண்டும். ஆனால், இன்னும் நிறையப் பேசவேண்டிய காட்சிகள் கொள்ளை கொள்ளை யாய் இருத்தலால் குறைத்துக் கொள்ள வேண்டியதே. பொன் : மணமக்களைக் கிழக்குப் பார்த்து அமர வைத்துத் திருமணம் நடத்துவதே நாட்டு நடைமுறை. ஆதலால் இத் திருமணக் காட்சியும் தூணில் கிழக்குப் பார்த்திருக்க அமைக்கப்பட்டுள்ளது.

கண்

-

'போர்' என்பது 'பொரு' ஒப்பு - என்னும் சொல்லடி யாகப் பிறந்த சொல் ஆகும். மணமும், பிறப்பு குடிமை முதலிய பத்துவகை ஒப்புகளை நோக்கி நிகழ வேண்டும் என்பார் தொல்காப்பியர். இச் சிற்பியின் நோக்கும் அதுவாகவே இருந்துள்ளது. சொக்கரும் அழகரும் இடப்பாலும் வடப்பாலும் இருக்க, இடையே அம்மை இருக்கிறார். இருவர் உயரத்திற் கும் அவர் இணையாக இல்லை. கழுத்து மட்டமே உள்ளார். சிற்பி கைவண்ணத்தால் அவர்கள் மட்டத் திற்கு அம்மையையும் ஆக்கிவிட்டார் பார்த்தாயா! பொன் : இறைவன் அம்மையப்பனாக நிற்கும் போது அம்மை ஒத்த உயரத்தில் தானே நிற்கிறார். அம்மை அப்பனாகும் நிகழ்ச்சித் தொடக்கம் தானே திருமணம். அதனைச் சிற்பி மனம் கொண்டிருக்கலாம்! இத் தூணின் வடக்குப் பக்கம் பார். இங்கே வீற்றிருப்பவர் நிலாவழகர் -சோமசுந்தரர். இவர் முகத் தழகைச் சொல்ல வேண்டியது இல்லை. கால் முட்டின் அழகையும் மொழியின் அழகையும் பார்! 'கால் முட்டுக்குக் காணுவானா?' என்னும் பழ மொழியை நினைவூட்டும் அழகு வடிவம்.

கண்