பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் 31

பொன் : சொல்கிறேன். பிருங்கி என்பார் ஒருமுனிவர். அவர் இறைவனையே வணங்குவார். இறைவி, இம் முனிவர் தன்னை இகழ்வதாகக் கூறினாள். ஆதலால் பெருமானுடன் ஓர் இருக்கையில் ஒன்றி இருந்தாள். முனிவரோ வண்டின் உருவம் எடுத்துக் கழுத்தின் இடைவெளி வழியே இறைவனை மட்டும் வண்ங்கி வலஞ் சுற்றிச் சென்றார். இதனால் அம்மை அருத்தவம் செய்து இறைவனின் ஒருகூறாக இணைந் தாள். திருச்செங்கோட்டில் இறைவன் மங்கையோர் பங்கனாக விளங்குகிறான். இஃது உமையொரு பாகமாகிய கதை.

கண்

சங்கன் பதுமன் என்பார் இருவர். இவர்கள் சிவனே மெய்ப்பொருள் என்றும் திருமாலே மெய்ப்பொருள் என்றும் தங்களுள் மாறுபட்டுச் சொற்போரிட்டனர். இவர்கள் மாறுபாட்டை ஒழிக்க விரும்பிய வியாழ முனிவர் புன்னை வனத்துக்குப் போகுமாறு ஏவினார். அவர்களுக்கு இறைவன் தானும் நெடுமாலும் ஓருருவாகக் காட்சி வழங்கினான் என்பது சங்கர நாராயணர் கதை. இதுதானே!

பொன் : ஆம்! இந்த ஆறாவது தூணில் வடக்குப் பார்த்து இருப்பவர் சலந்திரனுக்கு அருளியோர் (சலந்திர அனுக்கிரகர்). அவன் செருக்கை அடக்கியதையும், ஆழியைத் திருமாலுக்கு வழங்கியதையும் ஆழி யங்கையரைப் பார்த்தபோதே பேசிவிட்டோமே!

கண் : ஆம்! இத்தூணின் தென்பால் இருப்பவர்? பொன் : தென்பால் இருப்பவர் தென்முகக் கடவுளாம் தக்கணா மூர்த்திதாம். 'தென்பால் உகந்தவன்' 'தென்னாடுடைய சிவன்' 'தென்னவர் கோன்' 'தென்முகக் கடவுளாய் அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அருளினோன் என்னும் நினைவு உந்தத், தூணின் தென்பாலே படைத்துத் தென்பாலே நோக்கவும் வைத்துள்ளான். : வைத்த திறம் மட்டுமன்று. அவன் கைவைத்த திறமும் நன்றாகவே உள்ளது. கல்லிலே தன் வேலைத் திறமையைக் காட்டியுள்ளான். கண்ணிலும் மூக்கு நெற்றி இதழ் -இவற்றிலும் தவத்தை விளையாட விட்டிருந்தான்.

கண்

.