பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

கண்

31ஓ

ளங்குமரனார் தமிழ்வளம் - 31

வடித்ததால் மட்டுமன்று; அவர்கள் கையை இணைத்துக் காட்டியுள்ளானே, அதனால்.

அருச்சுனன் பாசுபதம் பெறச் சென்றபோது ஏற்பட்ட நிகழ்ச்சி தானே.

பொன் : ஆம்.

கண்

அருச்சுனனின்

வில்லால் அடிபட்டது என்ன

இறைவனுக்குப் பெருமையா?

பொன் : பாசுபதக்கணை வேண்டிப் பரமனை நோக்கித் தானே, தவம் புரிந்தான் அருச்சுனன்; அத் தவத்தின் அருமை பெருமையைக் கருதி அதைச் செய்ய ஒட்டாமல் தடுக்கத் தானே துரியோதனன் ஏவலால் மூகாசுரன் பன்றிவடிவில் ஓடிவந்தான். அவன் செய்த அழிபாட்டை அடக்கி அருள் புரியத் தானே இறைவன் வேடனாக வந்தான். வேடனாக வந்தவன் இறைவனே என்பதை அறியாமல் தானே, அருச்சுனன் அம்பு ஏவிப் பன்றியை அழித்த வெற்றியைத் தனக்கு உரிய வெற்றியாகக் கருதிச் சொற்போரும், மற்போரும் விற்போரும் நடத்தினான்! இறைவனென உணர்ந்ததும் அருச்சுனன் எப்படி உருகி நின்று போற்றினான்! இறைவன் ஆட்கொண்டு அருளும் பான்மைக்குச் சான்று தானே இது! அறியாமல் எதிரிட்டுப் பார்த்து அருள்புரிவதே இறைவன் தன்மை என்பதை விளக்கிக் காட்டும் செய்தி அன்றோ இது. இவர் 'சோமாசுகந்தர்! இறைவனும் இறைவியும் இருபாலும் இருக்க இடையே திருமுருகன் இருக்க அமைந்த இக் காட்சி அருமையானது.

கண்

"துறந்தாரும் துறப்பரோ மக்கள்மேல் காதல்' பொன் : வாழ்வியல் நோக்கில் எழுந்தவை தாமே வழிபாட்டு நெறிகள்!

கண்

நல்லது. ஒருகல்லில் ஒரு பக்கம் சிலைவடிப்பதே திறமையாகும். ஆனால் இருபக்கம், முப்பக்கம் ஏன் நான்கு பக்கமும் கூட நுண்ணிய வேலைப்பாடு செய்ய வேண்டுமானால் அச்சிற்பி எப்பாடு பட்டிருக்க வேண்டும்! ஒரு பக்கத்தில் தட்டும் தட்டு ஒரு சிறிது அதிர்ந்தால் கூட அரும்பாடுபட்ட அத்தூணை நிறுத்துதற்கு ஆகாதே.