பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

77

பொன் : சிற்பி காலக் கணக்குப் போட்டிருக்கமாட்டான்; காசுக் கணக்கும் போட்டிருக்க மாட்டான். 'கடவுள் பணிக்கு

கண்

க் கைத்தொண்டு படையல் என்ற கருத்தொன்றி லேயே கடமையாற்றியிருப்பான். தன் பிறவிப்பயன் இதுவே என்னும் உணர்வுடையவனாக இருந்தால் அல்லாமல் இத்தகைய உயிர்க்கலைச் செல்வங்களை அவன் உருவாக்கியிருக்க இயலாது. இத் திருப் பணியில் ஈடுபட்டவர்களும் இத்தகையவர்களாக இருந்திருந்தால் அன்றி ஈடுபட்டிருக்கமாட்டார்கள். : இக்கம்பத்தடி மண்டபத்திருப்பணி செய்தவர் எவர்? பொன் : இதனையும், இவ்விரண்டாம் திருச்சுற்றுமண்டபம் முதலிய சிலவற்றையும் கிருட்டிண வீரப்ப நாயக்கர் என்பார் எழுப்பினார் எனக் கூறினேன். இக் கொடிக் கம்பத்துக்கு முன்னருள்ள மண்டபத்திற்கு ‘வீரப்ப மண்டபம்' என்பது பெயர். இப் பெயர் அவரை நினைவு படுத்துவதாகும். பின்னர். ஏழுகோயில் நகரத்தார்களால் இம் மண்டபத் திருப்பணி புதுப்பித்து மேலும் அழகூட்டப் பெற்றது.

கண்

அடிக்கடி புதுப்பிப்பவர்களும், பழுது பார்ப்பவர் களும் வழி வழியாக வந்தமையால்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகியும் மேலும் மேலும் பொலிவுடையதாக விளங்குகிறது இத் திருக்கோயில்! எத்தனை அரண்மனைகளும், கோயில்களும், மண் டபங்களும் போற்றுவார் இல்லாமல் இருந்த இடமும் தெரியாமல் அழிந்து போய்விட்டனவே என்பதை அறியும் போதுதான், இத்திருப்பணி செய்த பெருமக்கள் நம் நெஞ்சில் நீங்கா இடம்பெறு கின்றனர்.

-

பொன் : இம் மண்டபத்திற்குக் கிழக்கே நடைவழிக்கும் கிழக்கே - மேற்கு நோக்கி நிற்கும் இவ் வீரத் திருவுருவங்களைப் பார். இவர்கள் அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் என்பவர். வடக்கே இருப்பவர் அக்கினி வீரபத்திரர்; தெற்கே இருப்பவர் அகோர வீரபத்திரர்.

கண்

இவர்கள் இருவருமே அச்சுறுத்த வல்ல தோற்றத் தினராக வெளிப்பட்டுள்ளனர்.