பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

83

துணையால் காத்து மீண்டது உண்டு. மதில் வாயில் களைச் சுவர் எழுப்பி மறைத்துப் போற்றியதுண்டு. ஆனால், சங்கத்தார் கோயில் அயலார் படையெடுப் பாலோ, அரும் பொருள் உடைமையாலோ அடைக் கப்பட்டது இல்லை! கோயிலாளர்களாலேயே புறக்கணிக்கபட்டு மண்சுவர் வைத்து மறைக்கப்

பட்டது.

தமிழுக்கும் சைவத்துக்கும் உள்ள தொடர்பென்ன? தமிழ் வளர்ச்சியில் சைவத்திற்கு உள்ள பங்கென்ன? இவ்வாறாகவும் சங்கப் புலவர்களை புலவர்களை மறைக்க வேண்டியது என்ன?

பொன் : வடமொழியே தெய்வமொழி என்றும், அஃ தொன்றே கோயில் வழிபாட்டுக்கும் மந்திரத்திற்கும் உரியமொழி என்றும், தமிழால் வழிபடுதல் ஆகம் நெறிக்கு அப்பாற்பட்டதென்றும் சில நூற்றாண்டு களின் முன் ஒரு பேரலை வீசியது! அது பெருங் காற்றாகவும் மோதியது. இறைவன் இறைவியர் பெயரும், திருக்கோயில் பெயரும் மொழி பெயர்த்து வடமொழிக்கு மாற்றப் பெற்றன! வடமொழியைக் கட்டிக் காக்கும் இடம் திருக்கோயில் என்னும் நிலைமை ஆகிய பின்னே தமிழ் வளர்த்த சங்கத்தார் கோயிலை மறைக்காமல் விடலாமா? இது திருவிளை யாடல் கண்ட மதுரையில் நடந்த திருவிளையாடல்! கண் : சங்கத்தார் கோயில் பிறகு எப்படி வெளிப்பட்டது? பொன் : 1950 ஆம் ஆண்டுபோல், வரலாறு அறிந்த ஒருவர் 'இங்கே சங்கத்தார் கோயில் உண்டே' என்று திருக்கோயில் அலுவலர்களை வினவ, அவர்களிடம் பல்கால் எழுதித் தூண்ட, அவர்கள் விழிப்படைந்து தேடி, அடைபட்டுக் கிடந்த இந்த இடத்தைச் சங்கத்தார் கோயில் எனக் கண்டுபிடித்தனர்.

கண்

இராசராசன் தேவாரப் பதிகங்களைக் கண்டுபிடித்த கண்டு பிடிப்புத்தான் இதுவும்.

பொன் : "1960 - 1963' ஆம் ஆண்டுகளில் திரு. பி. டி. இராசன் அவர்கள் முன்னின்று ஒரு பெரும் திருப்பணி கோயிலில் நிகழ்த்தினார். அப்போதுதான் இச் சங்கத்தார் கோயில் மற்றவற்றைப் போலவே திருப்பணி