பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

கண்

31

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

செய்யப்பட்டது. அதன் பின்னர் வெளிப்பட்டுக் கும்பிடு போடும் நிலைக்கு வந்தது. திறப்பு விழாவும் அதன் கல்வெட்டும் பழைய கோயிலுக்கு உண்டாக்கிய புதுப் பொலிவுதான்! இப்படியே உள்ளே பார்.

இங்கும் ஒரு 'திருமறைக் காடு'தானா?

பொன் : ஆம்! திறக்கப் பாடவும் ஒருவர் பிறக்க வேண்டும் போலும்! இவர் இறைவர்; இவர் குமரவேள்; இவர் கலைமகள்; இவர் உக்கிரப் பெருவழுதியார், கபிலர், பரணர், மாமூலர், பொன்முடியார்..

கண் : "வள்ளுவன் தனக்கு வளர்கவிப் புலவர்முன் முதற்கவி பாடிய முக்கட் பெருமான்”

முதலாம் புலவர்களை வணங்கிச் செல்வோம்.

ப்

பொன் : இச் சுற்றின் வட கீழ்க்கோடியில் இருப்பது 'மண்டப நாயகம்' என்னும் நூற்றுக் கால் மண்டபம். பெயரே இதன் சிறப்பை உணர்த்தும். இங்குள்ள சிற்பங்கள் நுண்ணியவை ; நுண்ணிய வேலைப்பாடு களும் உடையவை. இங்கே கூத்தபிரான் எழுந்தருளி யுள்ளார். இதனைக் கட்டி இங்கே இவரை எழுந்தருளச் செய்த பெரியவர் சின்னப்ப நாயக்கர் (கி.பி.1526) என்பார்.

கண்

பொன்

கண்

இடம் பொருத்தமாகத் தேர்ந்துள்ளார்.
ஆனால், ஞானசம்பந்தர் மண்டபம் இம் மண்டபம் கட்டியதற்குப் பின்னே கட்டப் பெற்றதால் அதனைக் கட்டியவரே இதற்குக் தக்கவாறு பொருத்தமாக அதனை அமைத்துள்ளார். கூத்தப் பிரானை அவர்கள் நேரே கண்டுகளித்துக் கொண்டிருக்க வைத்தவர் அவர்தாமே.
சரிதான்.

பொன் : இனி முதற் சுற்றுக்குப் போகலாம். இவ் வாயிலின் வடபுறம் பழனியாண்டவர் உள்ளார். தென்புறம் திருவருள் பிள்ளையார் (அனுக்கிய விநாயகர்) உள்ளார். இவ் வாயில் காவலர் (துவாரபாலகர்) இருவரையும் பார். கோபுரத்தைப் பார்ப்பது போல் பார்க்க வைக்கின்றனர் இல்லையா! பீடம் நீங்கிய