பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

(அ - ள்) ஒளிக்கும் மறைந்து வாழும்; நாகம் - நல்ல பாம்பு; அதில் - பாம்பினத்தில் ஒன்றான; எங்கணும் சஞ்சரிக்கும் - எங்கும் திரியும்; மாவஞ்சர் - பெருங்கொடியர்; தமைத்தாம் மறைப்பர் தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர்; தொண்டர்பால் மறையும் - நின் அடியாரைக் கண்டு மறையும்; கூற்றையும் ஒப்பா -கூற்றுவனையும் ஒப்பாகா.

96. மண்புலிகண் டம்புலிவாய் மானஞ்சு மேல்நின்தாள் கண்புலிய தூய கருத்தினரும் - எண்பெரிய

வெம்பிறவிக் கஞ்சுவரால் வேலவ! மெய்த் தொண்டரையின் னம்பிறவா தாண்டசர ணா.

(95)

(அ - ள்) மண்புலி - காட்டிலுள்ள புலி; அம்புலிவாய்மான் திங்களில் அமைந்துள்ள மான்; தாள்கண் பு (ல்) லிய திருவடியைப் பொருந்திய; தூய கருத்தினரும் திருத்தொண்டர் களும்; எண் பெரிய எண்ணுதற்கு மிக்க; இன்னம் பிறவாது ஆண்ட சரணா; திருவடி உடையவனே.

இனிதின் மகிழ்ச்சி

97. வெங்கதிரால் பொங்காது வேலை குளிர்மதியால்

(96)

பொங்குதல்போல்; இன்சொல்லால் பூவினுள்ளோர்-- எங்குமகிழ் வெய்தலன்றி வெஞ்சொற்கண் டெய்தார் முருக! நின்றான் உய்தலன்றி வேறுதரு மோ?

(அ - ள்) வெங்கதிர் -வெப்பமிக்க கதிரோன்; வேலை கடல்; பூவிலுள்ளோர் -புவியில் உள்ளோர்; வெஞ்சொல் - கொடுஞ்சொல்; உய்தல் அன்றி வேறு தருமோ கடைத்தேறுதல் அல்லாமல் வேறொன்றைத் தருமோ? தாராது.

பயனின்மை

98. துதியாத நாவும், தொழாமுடியும், கையும்,

பதியாத நெஞ்சு, முன்னைப் பாராக் - கதிர்விழியும், நின்புகழ்கே ளாச்செவியும் நின்வலம்செய் யாப்பதமும்

என்பயனாம் வேலிறைவ னே.

(97)

(அ - ள்) தொழாமுடி வணங்காத் தலை; தொழாக்கை - வணங்காக்கை; தொழா என்பதை முடிக்கும் கைக்கும் கூட்டுக; கதிர்விழி - ஒளியுடைய கண்; நின்வலம் - நின்கோயிலை வலம் வருதல்; பதம் - கால்கள்.

·

(98)