116
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
2. நன்றுடன் தீதா னாலும் அவரவர் நயத்து தம்மால் பண்ணிய பாவம் நன்மை பலித்தவர் அனுப விப்பார்; சென்றிடு நூறு கற்பம் செல்லினும் தவிர்ந்தி டாமல் அன்றுசெய் அனுப வங்கள் அனுபவித் திடவே வேண்டும்.
(அ -ள்) நயந்து - விரும்பி; பண்ணிய - செய்த; கற்பம் - ஒரு பெரிய கால அளவு, அஃது ஆயிரங்கோடி; அன்றுசெய் அனுபவங்கள் - முற்பிறவியில் செய்த வினையின் பயனை
3. சீர்பெறு தன்மச் செய்கை தெரிந்ததன் வழியே சென்று பார்பெறப் புத்தி பண்ணித் தமக்கெது பலித்தி டாதவ் ஏர்பெறு கருமம் எல்லாம் யாவர்க்கும் ஆகா என்று தேர்வுற விடுத்த றத்தை ஒல்லையில் செய்வர் தாமே.
(அ
-
-
(2)
ள்) சீர்பெறு தன்மச்செய்கை சிறப்புப் பெற்ற
அறச்செயல்; பார்பெறப் புத்திபண்ணி
உலகோர்
காள்ளுமாறு ஆராய்ந்து; ஏர்பெறு கருமம்-அழகுபெற்ற செயல்; தேர்வுற தெளிவுற; ஒல்லையில் - விரைவில்.
-
4. சீருடன் வருந்தித் தேடும் திரவியம் *பிறவும் செல்லா; ஊருடன் பிறரும் காடு மட்டினில் உடன்போய் மீள்வார்; பாரினில் வாழும் நாளில் பண்ணிய பாவம் நன்மை கூருடன் போந்த ராம கணையெனக் கூடப் போமே.
-
-
—
(3)
(அ - ள்) திரவியம் - பொருள்; செல்லா உடன்போகா; ஊருடன் ஊராருடன்; காடு மட்டினில் சுடுகாடு வரையில்; கூருடன் போந்த கூர்மையுடன் போன; கணை - அம்பு; கூடப் போமே -(பண்ணிய பாவம் நன்மை) உடன்போகும்.
-
உயிர்காத்தற் பயன்
5. அந்தண ருடனே ஆவுக் காபத்து வருங்கா லத்தில் தந்தம்நல் உயிரை விட்டும் தாம்இரட் சித்தார் ஆனால் இந்தநற் சனனம் போய்ஈர் ஐம்பது பிரம யோனி வந்தைசு வரியம் பெற்று வாழ்ந்துபின் தேவர் ஆவார்.
(4)
(அ -ள்) அந்தணர் - அருளாளர்; ஆ - பசு; இரட்சித்தார் - காத்தார்; சனனம் - பிறவி; பிரமயோனி வந்து - பிராமணப் - பிறப்பு உண்டாகி; ஐசுவரியம் -செல்வம்.
- பதியும்
(5)