பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி சாரம்

125

(அ-ள்) பாரி -மனைவி; தம்பால் - தம்மிடத்து; மெத்தவும் மிகவும்; விரைமலர்மகள் கடாட்சம் - மணமிக்க தாமரை மலரில் உறையும் திருமகளின் அருள்; நித்தியம் - என்றும்; விருட்சம் - மரம். (33)

முத்திக்கு உரியவர்

34. ஏர்பெறும் அர்ச்சு னர்க்கிங் கியம்புவான் ஐவர் தூதன் ஆரெனும் வாவி கூபம் தடாகமுண் டாக்கி ஓர்நாள் நீர்பெறச் செய்தாரேனும் நிச்சயம் இவர்கள் தாமும் பேர்பெறு குலமூ வேழும் பெறுகுவர் முத்தி தானே.

-

-

பாண்டவர்

(அ ள்) ஏர் அழகு; ஐவர் தூதன் தூதனாகிய கண்ணன்; ஆரெனும் (ஆரேனும்) எவரேயாயினும்; வாவி - குளம்; கூபம் - கிணறு; தடாகம் - பூம்பொய்கை; குலம் மூவேழும் - இருபத்தொரு தலைமுறையினரும்.

-

சேரிடம் அறிந்து சேர்க

35 உத்தமன் இரவில் வேசி *அமர்தெரு அருகில் உற்றால் மெத்தவும் சமுச யங்கள் விளம்புவர் உலகர் என்போல், புற்றுமாய் இரவு மாகிப் பொருந்திய பழுதை மேலே சுற்றியே கிடக்கில் ஐயம் தோன்றிடும் தன்மை போலாம்.

(34)

(அ-ள்) வேசி அமர்தெரு பரத்தை வாழும்தெரு; உற்றால்

சென்றால்; சமுசயங்கள் விளம்புவர்

-

ஐயப்பாடான

சொற்களைச் சொல்வர்; பழுதை - வைக்கோற்புரி.

இம்மையிலே நரகு அடைந்தவர்

(35)

36. சிறியவூர் இருந்தோன் தானும், அற்பனைச் சேவிப் போனும், பிரியமாய்ப் புலாலுண் போனும், பெருஞ்சின மனைவியோனும் வறிஞனாய்த் திரிவோனும்பெண், +மக்களைத் திரள்பெற் றோனும் அறுவகைப் பெயரும் பூமி தனில்நர கழுந்து வாரே.

-

ள்) சேவிப்போன்

(அ மனைவியோன்

-

ww

வழிபட்டு வாழ்பவன்; மனையாளை உடையவன்; திரள் - மிகுதியாக; அறுவகைப் பெயரும்- மேலே கூறிய ஆறுவகையினரும்; பூமிதனில் நரகு அழுந்துவர் - இவ்வுலகிலேயே நரகத் துன்பத்தில் மூழ்கியவர் ஆவர்.

+ அமர்மரு கருகே சென்றால். + மகவியை.

(36)