பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொறிய; எக்ய பலன் செய்யும் பொழுதே.

-

நீதி சாரம்

131

வேள்விப்பயன்; நிகழ்த்தும் காலே

இவர் செய்த பாவம் இவரைச் சேரும் எனல்

54. பூவினிற் சனஞ்செய் பாவம் பொருந்திய வேந்தற் காகும்

கோவினால் உற்ற பாவம் புரோகிதற் கென்று கூறும் பாவக இல்லாள் பாவம் பத்தாவுக் காகும் என்றும் ஏவல்செய் சீடன் பாவம் குருவினுக் காகும் அன்றே.

(53)

-

(அ - ள்) பூவினில் - உலகில்; சனம் - மக்கள்; கோவினால் அரசனால்; உற்ற - உண்டாகிய; பாவக இல்லாள் - அன்பான மனைவி; சீடன் - மாணவன்.

காவலன் கடன்

-

55. வேந்தொரு தருவாம்; சாகை மிகுந்தமந் திரியாம்; பூமி போந்திடும் இலையாம்; மூலம் பூசுரர்; ஆகையாலே வாய்ந்திடு மறையோர் தம்மை மன்னவன் காக்க இன்றேல் *தேய்ந்திடு மூலத் தோடு நாசமாம் திண்ணம் தானே.

(அ

-

ள்) தரு - மரம்; சாகை

-

(54)

கிளை; பூமி - மக்கள்;

-

போந்திடும் - தோன்றிய; மூலம் -வேர்; பூசுரர் மறையோர்; மூலத்தோடு அடியோடு;நாசம்-அழிவு.

மறையோர் தெய்வம் எனல்

56. செகமெலாம் தெய்வா தீனம்; தெய்வமந் திரத்தா தீனம்; மகம்பெறு மந்தி ரந்தான் மறையவர் தம்மா தீனம்;

இகபரம் இரண்டி னுக்கும் இயைந்திடு மறையோர் தம்மை அகம்பெறும்; இந்தப் பூவில் அவர்களே தெய்வம் ஆவார்.

-

(55)

(அ - ள்) செகம் - உலகம்; தெய்வ ஆதீனம் - கடவுளுக்கு உட்பட்டது; மகம் - யாகம் ; இகபரம் இம்மை மறுமை; இயைந்திடு பொருந்திய; அகம்பெறும் - தன்னுள் பெறும்; அவர்கள் - மறையோர்.

-

(56)

  • சேர்ந்திடு.