பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

(அ - ள்) மதகரி -மதயானை; புள்ளை

பறவையை;

இதமதி - குளிர்ந்த நிலவு; பானு கதிர்; ஈர் அரா - இராகு கேது; சிதமுள தூய்மையமைந்த; அரிது -அருமையானது.

அறிவாளனை அணுகும் மூன்று கேடுகள்

64. புத்திதான் அதிக ரித்துப் பொருந்தவே இருந்தான் ஆகில், மெத்தவு மலடன் ஆதல் அல்லது மிடியன் ஆதல் பெற்றிடும் ஆயுள் தானும் பிசகிடா தற்ப மாதல்

உற்றிடும் கரும மூன்றும் உள்ளதாம் உரைக்கும் காலே.

(63)

(அ - ள்) மலடன் - மகப்பேறிலான்; மிடியன் - வறியன்; பிசகிடாது -தவறாது; அற்பமாதல் - குறைவாதல்; கருமம் மூன்றும் - மேற்சொன்னவை மூன்றும்.

சிறு செயல்கள்

65. வாலையோ டிணக்கங் கொள்ளல், மதிப்பின்றிச் சிரித்தல், மின்பால்

சாலவே சண்டை செய்தல், தறுகணா ளரைச்சே வித்தல், கோலியே கழுதை ஏறல் கூத்தியா ரிடத்தில் வார்த்தை சீலமாய் உரைத்த லாலே லௌத்துவம் சேரு மன்றே.

(64)

(அ - ள்) வாலையோடு - இளையரோடு; இணக்கம் -நட்பு; மின் - மனையாள்; சாலவே - மிகவே; தறுகணாளர் - கொடியர்; கோலி வளைத்துப்பற்றி; கூத்தியார் பொதுமகளிர்; லௌத்துவம் -இழிவு

பொருந்தாருடன் பொருந்திய வாழ்வு

66. அடுத்தங்கே தமைச்சே விப்போர் அவர்கன்மேல் குறைகள் நித்தம்

தொடுத்தங்கே மிகப்பாராட்டித் தொல்வழக்கிடுவோர் தங்கள் இடத்தங்கே சேவித் துண்டி இயற்றுத லெல்லாம் பாம்பின்

படத்தங்கே எலிதான் வாழ்க்கை பண்ணுதல் போலாம் அன்றே.

(65)

(அ - ள்) தமைச் சேவிப்போர் - தம்மிடம் பணிசெய்வோர்; நித்தம்-நாள்தோறும்; தொல்வழக்கு - பழ வழக்கு; உண்டி இயற்றுதல் - உணவு ஆக்குதல்; பாம்பின் படத்தங்கே - பாம்பின் படத்தின் கீழே.

(66)