பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

திருமணம் செய்த இடத்தின் சிறப்பு

88. சீர்பெறு மவர்க்கும் மற்றச் சிறுமையோர் தமக்கும் வேட்ட ஏரகம் இனிதாம் என்போல், இந்திரை இடமாங் கீரப் பேர்பெறு கடலில் மாலும் பிரியமாய்ப் படுத்தான், ஈசன் ஏர்பெறு வெள்ளி வெற்பில் ஏறிவீற் றிருந்தான் அன்றே.

-

(அ -ள்) வேட்ட திருமணம் செய்த; ஏரகம் - அழகிய வீடு இந்திரை - திருமகள்; கீரப்பேர் பெறுகடல் - பாற்கடல்; மால் - திருமால்; ஈசன் - சிவபெருமான்; வெள்ளிவெற்பு - கயிலை மலை; வீற்றிருந்தான் - அமர்ந்திருந்தான். திருமகள் பாற்கடலிலும், கயிலைமலையிலும் பிறந்தனர் என்னும் கதையை உட்கொண்டது இச்செய்தி.

உமை

கூற்றம்

89. முந்தின யுகத்தில் ரேணு. முதிர்திரே தாயு கத்தில் வந்திடும் சீதை, பின்னும் வளர்துவா பரயு கத்தில் சுந்தரஞ் சேரும் அந்தத் துரோபதி கூற்ற மானார்

(அ

அந்தமில் கலியு கத்தில் அகந்தொறும் பெண்கள் கூற்றாம்.

ள்) முந்தினயுகம்

-

(88)

-

கிரேதாயுகம்; ரேணு

இரேணுகாதேவி; சுந்தரம் சேரும் - அழகமைந்த; அந்தமில் முடிவில்லாத; அகந்தொறும் வீடுதோறும். இம் மகளிரால் பலர் இறக்க நேர்ந்தமையால் கூற்றம் என்றார்.

கைம்மாறு கருதாதவர்

90. நதிமரம் வானம் மூன்றும் நலந்தரும் உபகா ரங்கள் இதமுடன் செய்வ தல்லால் எதிருப காரம் ஏற்கா மதிபெறு நல்லோர் தாமும் வழங்கிடும் உபகா ரத்துக் கெதிருப காரங் கொள்ளார் இதுநிச மாகுந் தானே.

(89)

88.um வே.

சீர்பெறு மவர்க்கு மற்றச்

சிறுமையோர் தமக்கும்

வேட்ட

ஏரகம் இனிதாம் என்போல் பொருந்திடும் பிறந்த இல்லம்

பார்பெறக் கடலில் மாலும் பள்ளிகொண்டிருந்தான் ஈசன்

ஏர்பெறும் உமையாள் இல்லம் கிரியின்மேல் இருந்தான் அன்றே.