பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

அனந்தம் எண்ணி மனம்புண் செய்யேல்.

அனந்தம் - பலவற்றை. புண் செய்யேல் -துன்புறுத்திக்

கொள்ளாதே.

ககர வரிசை

கற்பதின் மிக்கது சொல்தளம் பாமை.

தளம்பாமை மிகாமை. சொல்லடக்கம் கல்வியிற்

சிறந்தது" என்பது.

காரியம் இன்றி வீரியம் பேசேல்.

காரியம் - பயன்.வீரியம் - வலிமை.

கிளையைத் தறிக்கின் வினைபயன் இல்லை. தறிக்கின் - துண்டித்தால், ஒதுக்கினால். கீழ்ப்படிந் திருத்தல் வாழ்க்கைக்(கு) உறுநலம். உறு நலம்-மிகுந்த நன்மை.

குலத்தின் மிக்கது நலத்தினன் ஆதல். நலத்தினன் நல்ல தன்மையினன்.

-

கூடலின் நன்று கோடல் இலாமை.

-

கூடலின் நட்புச் செய்தலின். கோடல் இலாமை மனங்குன்றுதல் இல்லாமை.

கெட்டும் பட்டும் தொட்டதை விடேல்.

கெட்டும்

-

வறுமையால் கெட்டாலும்; பட்டும் -

துன்பத்தால் பட்டாலும்; தொட்டதை - எடுத்த நல்ல செயலை.

கேண்மை யுறப்பெறார்க்கு ஆண்மை நிலைபெறா.

கேண்மை - நட்பு.

கையைக் கொண்டு செய்யைத் திருத்து.

கையைக் கொண்டு - தன் கைப்பொருள் கொண்டு; தன்

முயற்சி கொண்டு; செய் -நிலம்.

கொண்டவன் அன்றிப் பெண்டிர்க் கில்லை.

கொண்டவன் - கணவன்.