பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனி பாலநீதி

ஞையும் வினையைக் கையகன் றிரு.

43

ஞையும் வினை (நையும் வினைகெடுக்கும் தீவினையை; கையகன்று விட்டு.

ஞொள்கல் அடைந்து என்கப் படேல்.

ஞொள்கல் - அச்சம்; எள்க - இகழ.

நோக்கந் தனையறிந் தாக்கம் விளை.

நோக்கம் -(பிறர்) எண்ணம்; ஆக்கம் - நன்மை; விளை

உண்டாக்கு.

தகர வரிசை

தரித்திரம் அடைதலின் மரித்திடல் மாண்பு.

மரித்திடல் - இறத்தல்.

தானம் ஏற்று மானம் குறையேல்.

தானம் - பிச்சை; மானம் பெருமை.

திரணமும் வாரா மரணம் வருவாய்.

திரணமும் வாரா

-

துரும்பளவு பயனும் வாராத

(வாழ்வினும்).

தீயினும் கொடிது வாயின் சுடுமொழி.

துன்பமும் இன்பமும் மன்பதைக் கியல்பு.

மன்பதை - மக்கள்.

தூய்மை வேண்டில் வாய்மை வழுவேல்.

வழுவேல் தவறாதே.

தெள்ளியர் என்போர் உள்ளிய நலத்தோர்.

தெள்ளியர் - தெளிந்த அறிவினர்; உள்ளிய

-

நினைக்கத்தக்க; நலத்தோர் நல்லியல்பு உடையோர்.

தேடலின் நன்றே ஓடலைக் காத்தல்.

-

பலரும்

தேடலின் - பொருள் தேடுதலினும்; ஓடலை பொருள்

போவதை.

தையலுக்(கு) அழகு வையகம் வழுத்தல்.

Late

தையல் - பெண்; வையகம் உலகத்தார்; வழுத்தல் வாழ்த்துமாறு வாழ்தல்.

-