பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனி பாலநீதி

55

தமரவரை தம்மைச் சார்ந்தவரை; என் மதியான் - என்ன

அறிவால்.

நன்றிதரும் செல்வமொரு நாளும் குறைவுறா(து)

அன்றிமிகும் செல்வமே(து) ஆங்கு.

(20)

நன்றிதரும் - நல்வழியால் கொண்டு. நன்மைக்குத் தரும்; அன்றி - அல்லாமல்; "அச்செல்வம் அல்லாமல் மிகும் செல்வம் ஆங்கு ஏது" என்க.

பழந்தரவே வித்திடுவர் பால்இலைபூ காயும்

நிழல்தருபோல் கல்வி நினக்கு.

(21)

வித்து இடுவர்பால் -விதைபோடுபவர்க்கு; 'பழத்திற்காகப் போடப்படும் விதை இலை, பூ, காய், நிழல் ஆயவெல்லாம் தரும்; அதுபோல் கல்வியும் அறம் பொருள் இன்பம் வீடு எல்லாம் தரும் என்பது.

மண்கிளறி உண்பவரே மாண்புடையர், மற்றவரோ

புண்கிளறி உண்குவரைப் போன்ம்.

(23)

மண்கிளறி உண்பவர் - உழவர் முதலாகிய உழைப்பாளர்; மற்றவர்-உழையாமல் உடல் வளர்ப்பவர்; போன்ம் - போல்வர்.

யவனங் கடலோடி இங்கங்(கு) உறையறிஞர் கவனித்(து) அவர்செய்கை காண்.

-

(24)

யவனம் கிரேக்கம் முதலிய வெளி நாடுகள்; அறிஞர் கவனித்து நாடுகண்ட அறிஞர் நல்வாழ்வைப் பார்த்து; அவர் செய்கை காண் - அவர்கள் செயலறிந்து செய்.

M

அரன்அயன்மால் என்போர் அனைவரும்ஓர் தேவே

திரன் அறியா மாந்தர்தெளி மின்.

(25)

அரன் - சிவன் ; அயன் - நான்முகன்; மால் - திருமால்; தேவே

- தெய்வமே; திரன் (திரம்) - உறுதி.

(26)

வள்ளன்மை இல்லாதான் செல்வம் வளர்வனபோல்

உள்ளது மற்றுமொரூ உம்.

வள்ளன்மை - கொடை; ஒரூஉம் -நீங்கும்.

(27)