பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனி பாலநீதி

அந்தரத்தில் - துன்பத்தில்; அணைப்பு

காத்தல்.

மொழியும் மொழியை முனைதிரி பின்றிக்

கழியும் வரையினும் கா.

-

67

அணைத்துக்

(111)

முனை திரிபுஇன்றி - சிறிதும் மாறுதல் இன்றி; கழியும் வரையும் - சாவும் அளவு; கா -காப்பாற்று.

மோகத்தைக் கொண்டொழுகும் மூர்க்கர்க்(கு) அறிவுறூஉம்

ஆகம் கடந்த கடை.

(112)

மோகம்- பேராசை; அறிவு உறூஉம் - அறிவு உண்டாகும்; ஆகம் கடந்த கடை - உள்ள செல்வமெல்லாம் போன போது.

மௌனத்(து) இருக்கின் மதிப்பர்; இவரின்

(113)

கவனத்தின் மிக்க உள.

இவரின் கவனத்தின் - இவரைப்பற்றிய அக்கறையில். (114)

யகர வரிசை

யமனோ(டு) அணைந்து கவளி கரிப்பன்

சமனோர்ந்து வீடாளா தான்.

அணைந்து சேர்ந்து; கவளி கரிப்பன் - விழுங்குவள்; சமன் ஓர்ந்து -ஒப்பாம் நிலைமை உணர்ந்து; வீடு ஆளாதாள் இல்லறத்தைப் பேணாத மனையாள்.

யாதொன்றும் பின்முன்னும் ஓர்ந்துபார்; பாராமல்

கோதாய் முடித்தல் குறை.

(115)

பின்முன்னும் ம் (பின்னும் முன்னும்) பின் விளைவும், முன்விளைவும்; ஓர்ந்து - ஆராய்ந்து; கோது. குற்றம். (116)

இதம்செய்வ தெல்லாம் அறமாம்; உயிர்கட்(கு)

அதம்செய்வ தெல்லாம் அறு.

இதம் - இன்பம்; அதம் - அழிவு; அறு விலக்கு. (117)

ஈசன் நியமநிதி ஈயினும் மீண்டவன்பால்

வாசமது பண்ண வரும்.

-