பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிபோத வெண்பா

சிறப்புப் பாயிரம்

இராமநாதபுரம் மன்னர் அவைக்களப் புலவர் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் இயற்றிய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மூதறிஞர் இயற்றுபன்னூற் கடல்மதியால்

மதித்தெடுத்து முதிரு நீதி

போதமெனும் பேரமுதைப் புலவர்செவிப்

புலன்மடுப்பப் புகட்டி னான்பூங் கோதைமன்னர் குவிந்துதிறை குவித்திருகை

குவித்துமுடிக் குலங்கள் சாய்ப்பப்

பாதமலர் சிவந்தமுத்து ராமலிங்கத்

துரைசேது பதிக்கோ மானே.

(1)

இராமநாதபுரம் மன்னர் அவைக்களப் புலவர்

முத்துவீரப்ப பிள்ளை இயற்றிய

பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தரக்கதள் உடுத்த கறைக்களத் திறைவன்

தருமிளங் குமரனை இதயத்

தலத்திடை இருத்தித் திருத்தகு முகவைத்

தனிவள நகரர சளிக்கும்

திரக்கதிர் வடிவேல் முத்துராம லிங்க

சேதுகா வலனுல குவப்பச்

செயப்படு நீதி போதமாம் தமிழைச்

செவிப்புலன் நிரப்பியாங் கதனுள்

சுரக்குறு மதுரச் சுவைப்பயன் நுகர்பூ சுரர்சமக் கிருதமென் மொழியிற் சொலப்படு நீதி சாரநூல் இதுபோல்