பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிபோதவெண்பா

4. குற்றம் எவையும் பொறுத்தல், குறிப்பறிதல், நற்றரும சிந்தனை, இந் நால்ஏழும் - பற்றா

காளை

உடையான் அரசுக்(கு) உடையானாம் வெள்ளை விடையான் விழிச்செல்வ மே!

83

(அ - ள்) பற்றா - (பற்றாக) பற்றும் பொருளாக; விடையான் - ஊர்தியுடையான் ஆகிய சிவபெருமான்; விழிச் செல்வமே - திருவிழிகளுக்குச் செல்வமாக அமைந்த குமரனே; நெற்றிக்கண் பொறியில் தோன்றிய குமரனே என்பதுமாம். அரசர் இயல்பு மூன்று வெண்பாக்களில் தொடர்ந்து கூறினார். ஆதலின், இறுதிப் பாடலில் விளி அமைத்தார். மேல் வருவன வற்றுக்கும் இவ்வாறே கொள்க.

அரசர்க்குத் துணைவர்

5.ஆயமைச்சர், நற்கா ரியத்தலைவர், சுற்றத்தார், வாயில்காப் போர், நகர மாக்கள், கரி - பாயுமா

வீரர், படைத்தலைவர், வேந்தர்துணை; எற்குனது சார்பு துணையாம்கந் தா!

-

(4)

(அ - ள்) எற்குனது எனக்கு உனது; ஆய் அமைச்சர் - பின்வருபவதை முன்னுணரும் அமைச்சர்; கரி பாயுமா வீரர்- கரிவீரர்,பாயுமாவீரர் (யானைவீரர், குதிரைவீரர்).

அரசர்க்கு உறுதிச் சுற்றம்

6.பாகசர், நட்பாளர், பண்டிதர் நி மித்திகர், பண்

பாகு முனிவர், அர சுக்குயிர்போல் - ஆகியநற்

சுற்றத்தார் ஆகும்; எற்குன் தொண்டர்குழாம் சுற்றமன்றோ கொற்றத்தார் வேலா குகா.

(5)

(அ - ள்) பாகசர் உணவு பக்குவம் செய்து தருவோர்; நிமித்திகர்- கணியர் (சோதிடர்) கொற்றத்தார் - வெற்றி மாலை

அரசர்க்குரிய சின்னங்கள்

7.முடி, கவரி, தோட்டி, முரசு, குடை, யானை,

கொடி, திகிரி, தோரணம், நீர்க் கும்பம், - கடல்வாய், மருமலர்ப்பூ மாலை, ஆ மைம், மகரம், சங்கம், பரி, யிரதம், சிங்க, மிட பம்.

(6)