பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

மகளுக்குத் திருமணப் பருவம்;

மகனுக்குக் கல்லூரிக் கல்வி;

குடும்பச் செலவு;

எதிர்காலத் தேவை;

பழங்கடன் - இவ்வளவும் உண்டு.

அவன், மறைந்துபோன தன் பாட்டனார் புதை குழியில் கோயில் எழுப்புவதற்காக,

இருந்த

நிலத்தையும் விற்கத் துணிந்தால்?

அறிவுடையர் ஏற்பரா?

இரண்டு

ஏக்கர்

மூடர் வேண்டுமானால் பாட்டனார் புகழை நிலை நாட்டி

விட்டாய் என்று பாராட்டலாம்.

அறிவுடையவர்களால், 'குடியைக் கெடுத்தாய்' என்று

சொல்லாமல் இருக்க முடியுமா?

வாழ்வைக் கருதாமல் வாண வேடிக்கை விடுபவர்

என்றுதான் இல்லை?

அன்பு

எதனுள் அடக்கம் எது?

ஆணுள் அடக்கம் பெண்ணா?

பெண்ணுள் அடக்கம் ஆணா?

ஆணும் பெண்ணும் பருப்பொருள் தோற்றம்!

ஆனால், நுண்பொருள் அன்பு.

அன்பிலே ஆணெனப்

அணுவும் இல்லை.

உருகி நிற்கும் ஒன்றே அன்பு.

பெண்ணென வேறுபாடு

எந்த வடிவை ஏற்றது எனினும் என்ன?

மெல்லிய பெண்மை அன்பின் அன்பின் உறையுள் என்பது

பொதுமை!

ஆனால், அதற்கு மாறும் உண்மை கண்கூடு!