பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

91

உருகி நிற்கும் அன்பிலா உடலம் பெருகி நிற்பதால் உலகினுக்கு ஆவதும் என்ன?

அன்பிலா உடலுக்கு அடக்கம் ஆறடி மண்ணே? அன்பை அடக்க அகல் உலகம் தானும் போதுமோ? ஓராறு அடிக்குளே ஒடுங்கும் வாழ்வில் உலகளாவிய அன்பைக் காண்பதே அறிவாம்.

எது வெல்லும்?

நோய் வெல்லுமா? மருந்து வெல்லுமா? வலியது எதுவோ, அதுவே வெல்லும்.

மெலியது எதுவோ, அதுவே தோற்கும்.

பிணியின் போர்க்கெனப் பிறிதொரு விதியோ இல்லை;

வலியவை என்றுமே வலியவை இல்லை!

மெலியவை என்றுமே மெலியவை இல்லை!

மாறி விடுதலும் உலகியல் காட்சி!

மருந்தின் வெற்றிக்கு எல்லை உண்டாம்!

மருந்தை வென்று வீறு கொள்வதே என்றும் இயற்கை

முறைமை!

அதனால்தானே,

எய்துதல்' என்றே கூறுவர்.

இறப்பைப் பலரும் இயற்கை

இறவா உடலராய் எவரே இருந்தார்?

புகழுடல் என்னின் பொருந்தும்;

பூத உடற்கது உண்டோ?

திரும்பிப் பார்

முகத்தைச் சுளித்துக் கொண்டு துன்பத்தை

ஏற்றுக் கொள்வதைவிட

முகத்தை மலராக வைத்துக் கொண்டு

அத்துன்பத்தை வரவேற்கலாமே!