பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

ஆயினும் என்ன?

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

பற்றற நின்ற துறவியைப் போலப் பழுத்து முற்றிய ஆலின் இலைகள் பரவி வீழ்ந்தன.

வீழும் இலைகளின் விம்மிதம் என்னே! விளம்புதல் கேட்க:

“நீரிடைப்படினும் படுவோம்; அன்றி

நிலத்திடைப் படினும் படுவோம்; அன்றித்

தீயிடைப் படினும் படுவோம்;

எமக்கென் றாயதாம் விருப்போ வெறுப்போ இல்லை;

ஊழ்வழி ஆக

ஆம்! ஆம்! உடலச் சுமையை எளிதில் உதறி

உயிரார் ஓடும் நாளில்

அதனை எவ்வழி விடுத்தால் என்ன?

சுடினும் என்ன? இடினும் என்ன?

விடினும் என்ன? விரைக்கினும் என்ன?

உடலார்க் கெல்லாம் ஒன்றே!

மெய்ப்பொருள் கருத்தை மிகத்தெளிவிக்கும்

மேதகும் ஆசான் ஆலமரமே!

இதனைக் கல்லார், கல்லால் குருமணிக்

காட்சியை காட்டிக்

கதைப்பதால் காணும் பயன்தான் என்னே!

விரைந்த சில முடிபுகள்

'என்ன அவர்? நாம் அனுப்பிய அஞ்சலுக்குப் பெற்றுக் கொண்டேன் என்று ஓர் எழுத்துத் தானும் எழுதினார் அல்லரே! அவர் தாமா ஏதாவது ஒன்று என்றால் ஓடிவந்து முன்நிற்பார்?" எனக் கூறுகிறோம்.

நம் அஞ்சல் அவர்க்குப் போயிற்று என்பதற்கு என் உறுதி? அஞ்சலே போனாலும் அவர் பார்த்தார் என்பதற்கு என்ன உறுதி?

ஏனெனில், அஞ்சலை அவர் வாங்காமல் வேறொருவர் வாங்கி ஓரிடத்து வைத்துவிட்டு, அவர் வந்தபோது அதனை எடுத்துத் தாராமல் மறந்து விட்டால் - இது என்ன நிகழாததா?