பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. முதன் முதல் பார்த்த முகம்

ஓர் அரசர் வேட்டைக்குப் போனார்; அன்று வேட்டை எதுவும் கிடைக்கவில்லை; வெறுங்கையுடன் திரும்பினார். 'இன்று யார் முகத்தில் விழித்தேனோ இப்படி ஏற்பட்டது" என்று எண்ணினார். காலையில் எழுந்தவுடன் அவர் முதன் முதலாகப் பார்த்த பிச்சைக்காரன் ஒருவன் நினைவுக்கு வந்தான்.

அரசர் அரண்மனைக்கு வந்ததும் அந்தப் பிச்சைக் காரனைத் தேடிப் பிடிக்கக் கட்டளையிட்டார். ஏவலர்கள் அவனைக் கொண்டுவந்து சேர்த்தனர். "அடே! அருள் கெட்டவனே! உன் முகத்தில் இன்றைக்கு விழித்தேன்; எனக்கு வேட்டையே அகப்படவில்லை; அவ்வளவு கெடுமூஞ்சி உனக்கு என்றார். “இத்தகையவன் இருந்தால் இவன் முகத்தில் விழிப்பவர் எல்லாம் விளங்கமாட்டார்கள். இவனை வெட்டிவிடுங்கள்" என்று ஏவலர்களுக்கு அரசர் கட்டளையிட்டார்.

""

அவன்

அறிவமைந்தவன் அந்தப் பிச்சைக்காரன்; அரசனை நோக்கி, “அரசே, இன்று முதல் முதலாகக் காலையில் என் முகத்தில் நீங்கள் விழித்ததால், உங்களுக்கு வேட்டை அகப்படவில்லை; ஆனால் நான் இன்று காலையில் முதன் முதலாக உங்கள் முகத்தில் விழித்ததால் என் தலையே வெட்டப்பட இருக்கிறது. ஆதலால், நம் இருவருள் மிகமிகக் கடுமூஞ்சி யாருக்கு என்று முடிவு செய்து தீர்ப்பு வழங்குங்கள்; என்றான்.

அரசர் திகைப்படைந்தார். பிச்சைக்காரன் உரையில் உள்ள உண்மையையும் திறமையையும் உணர்ந்து அவனுக்கு விடுதலை தந்தார்.

இக்கதை, நம் நாட்டில் வழங்கும் கதை. இதேபோல் 'முல்லா' கதை ஒன்று வழங்குகின்றது.

ஓர் அரசர் வேட்டைக்குப் புறப்பட்டார். அப்பொழுதில் எதிரே முல்லா வருவதைக் கண்டார்; கண்டதும் 'முல்லாவைப் பார்த்தால் எதுவும் விளங்காது' என எண்ணினார். தம் ஏவலர்களை அழைத்து, “முல்லாவைச் சாட்டையால் அடித்து