பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

முல்லாவுக்கும் அரசருக்கும் மிகநெருக்கம் அடிக்கடி முல்லா அரசரைப் பார்ப்பார்; உரையாடுவார்; அரசரோடும் உண்பார். அப்படி உண்டுகொண்டிருந்த ஒரு வேளையில் அரசர் முல்லாவைப் பார்த்து, "இந்த அவரை மிகச்சுவையானது அல்லவா! நீர் என்ன நினைக்கிறீர்?" என்றார்.

"நான் என்ன நினைக்கிறேன்? அரசே, நீங்கள் நினைப்பது போலவே, அவரை மிகச்சுவையானது தான்; சுவையில் இதற்கு ஈடு இணை ஒன்று உண்டா?" என்றார் முல்லா.

தொடர்ந்து அவரைக்காயே அரண்மனையில் சமைக்கப் பெற்றது. அரசர் பாராட்டிய காய் அல்லவா அது! சமையல் காரன் இந்த உரையாடலைக் கேட்ட பின்பு அவரைக்குத் திடீரென்று மிகமிகச் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது! அவரை இல்லாத சாப்பாடு இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

ஆவின்பால் ஆனால் என்ன? அருஞ் சுவைத் தேனே ஆனால் என்ன?

'பழகப் பழகப் பாலும் புளிக்கும்; பன்னீராண்டானால் தேனும் புளிக்கும்" என்பவை நம் நாட்டுப் பழமொழிகள்!

அவரையே தொடர்ந்து கறியாக ஆக்கப்பெற்றதைக் கண்டு அரசருக்கு அவரைமேல் வெறுப்பாயிற்று. "என்ன, இந்த அவரையை விட்டால் வேறு கறி இல்லையா? முல்லா! நீர் என்ன நினைக்கிறீர்?” என்று அரசர் இன்னொரு நாள் முல்லாவினிடம்

கேட்டார்.

"ஆமாம் அரசே! அவரை மிகமிகச் சுைைவயற்றது! அதை யார்தாம் விரும்பியுண்ண முடியும்" என்றார் முல்லா.

"என்ன முல்லா? நீர்தாமே அவரை சுவையானது என்றீர்? ப்பொழுது சுவையே இல்லாதது என்கிறீரே என்றார் அரசர்.

"ஆமாம் அரசே! அப்பொழுது அப்படிச் சொன்னேன்: பொழுது இப்படிச் சொல்கிறேன்; நீங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அப்படியே நானும் சொல்கிறேன். உங்களிடம் அல்லவோ நான் வேலை பார்க்கிறேன்? உங்கள் உதவியால் அல்லவோ வாழ்கிறேன்? உங்கள் விருப்பப்படி சொல்ல வேண்டும் அல்லவா! நான் என்ன அவரைக் காயினிடமா ஊழியம் செய்கிறேன்? அதனைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருக்க" என்றார் முல்லா. அரசர் திகைப்பும் வியப்பும் அடைந்தார்.