பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

முல்லாவின் கதைகள் முப்பது

165

என்னை அச்சுறுத்திய உம்மை என்ன செய்கிறேன் பாரும்!" என்று மிரட்டினார் அரசர். அது கண்ட புலவர் "அரசே! என்னைப் புலி விரட்டுகிறது. அதைத் தாங்கள்தாம் அழிக்க முடியும்" என்றார்.

"அப்படியா? எங்கே அந்தப் புலி?" என்று கேட்டார் அரசர். அதற்குப் புலவர், "அரசே' என்ன நான் செய்வேன் என்னை 'அல்லும் பகலும், 'வறுமைப்புலி', 'பசிப்புலி', நோய்ப்புலி' என்னும் புலிகள் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன" என்றார்.

அரசர் சினந்து, "ஆ என்னிடம் பொய் சொல்லியது மின்றிப் புரட்டும் செய்கிறீரே?" என்று கூறிப் புலவரைச் சிறையிலிட ஆணையிட்டார். உடனிருந்த காவலாளன் உடனே புலவரைப் பிடித்துச் சென்றான்.

சிறையிலடைப்பட்ட புலவர், 'வறுமைப்புலி' என்று சொன்னது வம்பாய்ப் போய்விட்டதே என்று எண்ணி வருந்தினார்.

மறுநாளே, அரசர் மனமிளகி, புலவரை விடுதலை செய்து, அவருடைய பழைய ஆடைகளை நீக்கிப் புதிய பட்டாடையும் மேலாடையும் வழங்கிக் கைந்நிறையப் பணமும் கொடுத்துப் புலவரே! உம்மை இதுவரை அல்லல் படுத்திய புலி செத்தது. இனி நீர் அமைதியாக வாழலாம்" என்று வாழ்த்தி அனுப்பினார். இது தமிழ்நாட்டு கதை. இது போல் முல்லாவின் கதை ஒன்றும் வழங்குகிறது:

முல்லா ஓரூர்க்குப் போனார். ஒரு விடுதியில் தங்கினார். அவரைப்பற்றி முன்னரே அறிந்திருந்தான் அவ்விடுதியின் உரிமையாளன். அதனால் முல்லாவுக்கு வேண்டியவற்றை யெல்லாம் விரும்பி விரும்பிச் செய்தான். இரவுப் பொழுது வந்தது. 'உங்களுக்கு இரவில் ஏதேனும் வேண்டுமானால் கூப்பிடுங்கள்' என்றான்.

முல்லாவுக்கு உறக்கம் வரவில்லை. தண்ணீர் குடிக்க வேண்டும்போல் இருந்தது. விடுதியாளைக் கூப்பிட்டார். அவன் வரவில்லை. மீண்டும் கூப்பிட்டார். யாரும் என்ன வென்று கேட்கவில்லை. அதனால் தீ தீ தீ' என்று கத்தினார். விடுதியாள்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.

புகை எங்கும் தெரியவில்லை! தீயும் தெரியவில்லை. 'தீ எங்கே எரிகிறது?' என்று முல்லாவினிடம் கேட்டனர். தம்