பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

"கழுதை போகிறது; மாடு போகிறது" என்பது வழக்கம். அங்கே வள்ளலார் வரக்கண்ட அவர் "இதோ மனிதர் வருகிறார் என்று கூறித் தம் கையால் தம்மை மறைத்து நின்றார். அவர்க்கு வள்ளலார் ஏதோ கூறினார்; அன்றிரவே அவர் அவ்விடத்தை விட்டு அகன்றார். இச் செய்தி வள்ளலார் வரலாற்றில் உள்ளது.

"குறிப்பிற் குறிப்பு உணரவல்லார்" என்றும், “உறுப் பொத்தல் மக்களொப் பன்றால் என்றும், மக்களே போல்வர் கயவர் என்றும் வள்ளுவர் கூறும் வாய்மொழியை மெய்ப்பிக்க வல்ல தேர்ச்சியர் துறவியார் என்பது வெளிப்படுகின்றது. அன்றியும் வள்ளலாரைக் கண்டு கொண்டது

“ஐயப்படாது அகத்த துணர் வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்”

என்னும் குறளுக்கு விளக்கமாக அமைந்ததாம்.

வள்ளலார் குறிப்பறியும் தேர்ச்சி எப்படி? தொழுவூரார் குறிப்பிடுகிறார்: "இவர் பிறருடைய மனத்தில் நிகழுபவைகளைப் பார்க்க வல்லவர்" என்கிறார். கண்ணேரில் நடப்பதைத்தானே காணமுடியும்? வள்ளலார் மனத்து நிகழ்வதையே காணவல்லார் எனின் அவர் குறிப்பிற் குறிப்புணர வல்லார் அல்லரோ! தொழுவூராரின் இக்குறிப்பு "பிரமஞான சங்கத்திற்கு எழுதிய உண்மைகள்" என்பதில் ம் பெற்றுள்ளது.

அளவளாவுதல்

மனோன்மணீயம் இயற்றிய பேராசிரியர் சுந்தரனாரின் ஆசிரியர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் என்பார். அவர் ஒருகால் தில்லைக்குச் சென்றிருந்தார். அதுகால் வள்ளலாரும் அங்கே தங்கியிருந்தார்.

சுவாமிகளை நேரில் சென்று காண விரும்பிய வள்ளலார் தக்கார் ஒருவரை விடுத்துச் சமயம் அறிந்துவர விடுத்தார். அதனை அறிந்த சுந்தர சுவாமிகள் "இங்கா சமயம் பார்த்து வரச் சொன்னார்கள்" என்று தாமே முந்துற எழுந்து தம் அன்பர் கூட்டத்துடன் வந்து வள்ளலாரைக் கண்டார். முந்தி வந்து பார்க்க விரும்பியவர் வள்ளலார்! அவருக்கும் முந்திக் கொண்டவர் சுவாமிகள்! "என்றும் பணியுமாம் பெருமை" என்பதற்கு இவ்விருவர் சந்திப்பும் சான்றாம்!