பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

103

மனத்துக்கண் மாசின்மையே அற வழிபாடு என்றும், மற்றவை ஆகுல நீர (ஆடம்பரமானவை) என்றும் கொண்டவர் அடிகளார். அதனால் தூய்மை அமைதி முதலியவையே விளங்கும் வழிபாட்டு நெறியைத் திட்டப்படுத்தினார்.

தேங்காயைப் பலியாக உடைத்தலையும் அவர் விரும்பினர் அல்லர். இறைவரை நம் வாயினால் வாயார வாழ்த்துவது தவிரப் பிறரைக் கொண்டு வேறு மொழியில் பொருள் புரியாமல் வழிபடுதல் முறையன்று எனவும், திருமுழுக்கு, பூவணி, விளக்கணி, திருவுலா இன்ன ஆரவாரங்கள் சன்மார்க்கம் சார்ந்தவை அல்ல எனவும், அரிதிற் கிடைக்கும் பணத்தை ஏழைகளின் பசி நீக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும் எனவும் அடிக்கடி மெய்யன்பர்களுக்கு வள்ளலார் அருளுரை வழங்கினார் என்பதையும் அவ்வரலாறு உரைக்கின்றது (177).

ஓரன்பர் திருவிளக்குகள் நிறைய ஏற்றி வைக்க அதனைக் கண்டு, "இவ்வளவு அதிகமான விளக்குகள் ஏன்? ஏதோ ஒன்றி ரண்டை வைத்துக் கொண்டு மீதியை ஏழைகளின் உணவுக்குப் பயன்படுத்தலாமே" என்று வள்ளலார் கண்டித்தாராம்.

மற்றோரன்பர் நிரம்பப் பூக்கள் வாங்கி வர "ஏன் காணும் இவ்வளவு பூக்கள்? ஆண்டவர் கேட்டாரா? இதனால் நிறைவு அடைவாரா? தும்பை அறுகு முதலியவற்றை நீரே போய்க் கொண்டு வரலாகாதா? இப்பணம் எத்தனை ஏழைகட்குப் பசியைப் போக்கும்" என்று நன்னெறி புகட்டினாராம்

வள்ளலார்.

அடிகளார் வாழ்ந்த நாளிலேயே சபையின் நடைமுறை அவர் கருத்துப்படி நிகழாமையால் சபையைப் பூட்டி அதன் திறவுகோலை அவர் உறைந்த சித்திவளாகத் திருமாளிகைக்குக் கொண்டு சென்றுவிட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் திருவுருக் கரந்த பின்னர்ச் சில ஆண்டுகள் கழித்தே சபை திறக்கப்பட்டது என்பதும் அறியத்தக்க செய்திகள்.

வள்ளலார் தம் கருத்துக்கு மாறுபடச் சபையின் நடவடிக்கை உள்ளது என்பதை உணர்த்திய பின்னரேனும் அவர் கருத்துப்படி நிகழலாயிற்றா? இதனை முற்குறித்த நூல் குறிக்கிறது:

(வள்ளலார் கருத்துப்படி) "நடந்து வந்த பூசையானது நாளடைவில் மாறுபட்டுச் சன்ார்க்கத்திற்கு விரோதமாக அபிஷேகாதிகள் நாதசுரங்கள் கொட்டு முழக்கங்கள் பேரிகை