பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

-

இளங்குமரனார் தமிழ்வளம் 34 ✪

இக்குறிப்பு, திருக்குறளுக்கும் பொருந்தும். "சமயக்கணக்கர் மதிவழிக் கூறாது" இது வழியென்ற பொது நூல் திருக்குறள் என்பது கல்லாடல் சொல்லாடல்!

"பல்கலைக்கழக நிர்வாகத்துள் - நடை முறையுள் - எங்ஙனம் அரசியல் புகுதல் ஆகாதோ அங்ஙனம் வடலூர் நிலையங்களின் நிர்வாகத்துள் - நடைமுறையுள் - சமயம் புகுதல் ஆகாது"

"நிர்வாக அதிகாரியும் தர்ம கர்த்தர்களும் புலால் மறுத்தவர்களாயிருப்பது அடிப்படைத் தகுதியாக அமைய

வேண்டும்

"வடலூர் ஒரு பெரிய கடவுட் பண்ணையாக இருந்த நிலைபோய்த் தொழிற் பண்ணையாக மாறிவருகிறது"

"பார்வதி புரத்தின் வடபுறத்தே பொட்டல் காடாகக் கிடந்த வெளியை அருள் வெளியாக்கினார் அடிகள். அவ்வருள் வெளியை அப்படியே போற்றிப் பாதுகாக்க வேண்டும்”

"திருப்பணிப் பெயரால் எம்மாற்றமும் செய்திருத்தல் கூடாது.அப்படியே, அதன் பழமையைக் காத்துத் திருப்பணி செய்திருக்க வேண்டும்."

'வடலூரில் திருநீற்றுப் பிரசாதம் வழங்குவதை நிறுத்த வேண்டும். திருநீற்றுப் பிரசாதம் வழங்கும்வரை அது சைவக் கோயிலாகவே இருக்கும்"

"எப்பிரசாதமும் வேண்டுவது இன்று. வேண்டுமாயின் மலர்களைப் பிரசாதமாக வழங்கலாம்

இவை ஊரனடிகளாரால் 1967 இல் எழுதப்பட்டவை. இதுவும் தொடர்கதையே! இதுகாறும் ஏற்று நடைமுறைப் படுத்தப்பட்டிலது.

<

வள்ளுவர் வழியில் வள்ளலார்' என்னும் இந்நூலில் இவ்வாய்வு மேற்கொள்வானேன் எனக் கற்பார்க்குத் தோன்றக்கூடும். வள்ளுவர் வாய்மொழி செயன் முறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறே வள்ளலார் வாய்மொழியும் செயன்முறைப் படுத்தப்படவில்லை" என்பதே இதனைக் குறிக்கும் கருத்தாம்.

வள்ளுவம் செயன்முறைப்பட்டிருந்தால் இன்று உலக மறையாக உயர்ந்திருக்கும். அனைத்துலக நாடுகளின் ஆணை நூலாகத் திகழ்ந்திருக்கும். தமிழர்தம் தகவிலா இழிநிலை, தகவார்ந்த அந்நூலை உயராவண்ணம் தடுத்துளது.