பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

349

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

"சித்தி என்பது அருளனுபவம்; இது முத்தியினும் உயர்ந்தது. வள்ளற் பெருமான், 'சித்தியடைவதற்கு முத்தி ஓர்படியே' என்றும், 'முத்தியைப் பெறுவது சித்தியின் பொருட்டே' என்றும் கூறுவர்.

‘முத்தி என் பதுநிலை முன்னுறு சாதனம் அத்தக வென்ற அருட் பெருஞ்சோதி'

‘சித்தி என்பதுநிலை சேர்ந்த அநுபவம்

அத்திறம் என்றவென் அருட்பெருஞ் சோதி”

நிலைமுன்னுறு சாதனம் முத்தி என்றும் நிலை சேர்ந்த அனுபவம் சித்தி என்றும் கூறுவது காண்க.

சாதனமாகிய முத்தியை அடைந்தால் சாதகமாகிய சித்தியைப் பெறலாம். முத்தியை அடைவது சித்தியைப் பெறுவதற்காகவே. இதனையும் அடிகளே அருட்பெருஞ்சோதி அகவலில்,

'புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை அடைவதென் றருளிய அருட்பெருஞ்சோதி'

என விளக்குகின்றனர்."

சித்திவளாகத்து வாழ்ந்த வள்ளலார் வாழ்வு செம்பொருள் காணும் வாழ்வாயிற்று. அது வள்ளுவர் வழியில்,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்ப தறிவு”

என்பதாயிற்று. செம்பொருள் கண்டார் கூற்றினை வெற்றி கொண்டவராவர். இதனைக்,

"கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு”

என்னும் குறளால் அறியலாம்.

கூற்றையும் புறங்கண்ட நிலை, 'பேரா இயற்கை நிலை'.

இதனைத் திருவள்ளுவர்,

66

'ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்

என்கிறார். இப்பேரா இயற்கை வள்ளுவரால்,