பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

117

எனக்கமைந்த இயல்பான வள்ளலாரியத்தை மேலும் வளமாக்கிய இப்பொழிவுகளின் திரட்டுக் கொடையே, இதுகால் வெளிப்படும் முச்சுவடிகளும் ஒரு சுவடியாம் சுவடி!

இதனைத் தஞ்சை மண்ணில் வெளியிடுதலே தக்கது என்னும் என் உணர்வால், தமிழும் வள்ளுவமும் வள்ளலாரியமும் சிறக்கத் தம் வாழ்வை முழுதுற ஒப்படைத்துத் தந்தை வழிநிற்றல் மைந்தரின் கட னெனக் கொண்ட மாறவர்மனார் தம் தந்தையார் வெளியீடாக வெளியிடுவதற்கு மகிழ்ந்து, நன்றி கூறியும் வாழ்த்தியும் நூலாக்கப் பொறுப்பை அவர்க்கு வழங்கி மகிழ்கின்றேன்.

நினைவு

இன்பமே சூழ்க.

இரா.இளங்குமரன்

08.10.2007