பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

“படைத்தற் கடவுள் தந்த உடம்பு பூத உடம்பு;

படைக்கும் புலவன் தந்த உடம்பு புகழ் உடம்பு;

புலவன் படைத்த உடம்பு போல், படைத்தற் கடவுள் படைத்த உடல் நிலை பெறாது”

என்கிறது. அது,

66

“கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்

மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன் செய்

வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு”

என்பது (7)

131

"புகழுடம்பு கருதியே சான்றோர் பூத உடம்பு தாங்குவரேயன்றி, மற்றை வகையால் தம் உடம்பைப் பேணுவார் அல்லர்'" என்பதையும் அந்நீதி நெறிவிளக்கம் கூறும்.

“களைகணாத் தம்மடைந்தார்க் குற்றுழியும் மற்றோர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடையது ஊனுடம் பென்று புகழுடம்பு ஓம்புதற்கே தானுடம்பு பட்டார்கள் தாம்”

என்பது அது (40).

புகழுடம்பு பற்றிக் கருதாமல் பூத உடம்பு பேணுதல் கருத்தாகி வாழ்தல் உயிர் வாழ்வன்று, நடைபிண வாழ்வு எனவும் பழிக்கிறது நீதிநெறி விளக்கம் (31)

“முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி

உடுப்ப உடுத்துண்ப துண்ணா - இடித்திடித்துக் கட்டுரை கூறின் செவிகொளா கண்விழியா நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம்”

என்பது அப்பாடல்

"மூப்பையும் பிணியையும் முன்னேவிடுத்துப் பின்னே கூற்றுவன் உயிரைக் கொள்ளையிட வருவான். அவனைத் தடுக்க வல்லது ஒன்றே ஒன்று; அது, அற அரணம்; பிற அரணம் அவனைத் தடுத்து நிறுத்தா" என்று, அறநெறிச் சாரம் கூறுகின்றது (21)

“மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து கூற்ற அரசன் குறும்பெறியும் - ஆற்ற