பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

து

இளங்குமரனார் தமிழ்வளம் 34

- இது தனித் திரு வலங்கலில் ஒரு பேரொளி (5452)

சாதி சமய சடங்கு விகற்பம் கடந்த சன்மார்க்க நிலையில் வள்ளலார் பெற்ற பேறு என்ன? பலப்பல பாடல்களில் பகர்கிறார் சில சான்றுகள் :

“உடல்பொருள் ஆவியும் உனக்கே பின்கடன் இன்றிக் கொடுத்தனன்” (3742)

“உடல்உயிராதிய எல்லாம் நீ எடுத்துக் கொண்டுன்

உடல் உயிராதிய எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்” (3802) "உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை” (3806)

6699

என் உயிரும் என் உடலும் என்பொருளும் யானே இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே தன் உயிரும் தன் உடலும் தன்பொருளும் எனக்கே

தந்துகலந் தெனைப்புணர்ந்த தனிப்பெருஞ் சுடரே' (4149)

“நானும் தானும் ஒருவடி வாகி”

(4188)

“தானும் அடியேனும் ஒருவடிவாய்”

(4189)

"என்னைச் சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து"

(4532)

'என்னைத் தானாக்கிக் கொண்ட தயாநிதி”

(4553)

“என்னைத் தன்மயமாக்கிய”

(4579)

"என்புடை நீ இருக்கின்றாய் உன்புடையான் மகிழ்ந்தே

இருக்கின்றேன் இவ்வொருமை யார் பெறுவார்?" (4639)

“என்னையும் என் பொருளையும் என் ஆவியையும்

தான் கொண்டிங் கென்பால் அன்பால்

தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும்

""

களித்தளித்த தலைவன்

(4672)

"உன்னைவிட மாட்டேன்நான் உன்னாணை எம்பெருமான்

என்னைவிட மாட்டாய்-இருவருமாய் மன்னி”

(5394)

'நானானான் தானானான் நானும்தா னானான்”

(5410)

“உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்

ஒரு திருப் பொதுவென அறிந்தேன்"

(5426)