பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இருகுறிப்பு:

இளங்குமரனார் தமிழ்வளம் -34

வள்ளலார் கூறிய இரண்டு குறிப்புகளை நாம் மீள எண்ணுதல் வேண்டும். ஒன்று, “நான் இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்" என்பது

"உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல

உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே

உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே

உயிர் நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே'

என்னும் அருட் பெருஞ்சோதி அகவல் அடிகளில் (969-974), எவ்வுயிரும் தம் உயிராக் கொள்ளும் இறை நிலை விளக்குதலை அறியலாம். உயிரெலாம் என்பது உயிரியெலாம் உயிர் நின்ற உடம்பெலாம்-என்பது தானே பொருள்.

'ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை”

என்னும் மணிமொழியையும் எண்ணுக.

-

'அழியாப் புகழுடலர்' இவரென்னத் திருவள்ளுவர் ஒருவரைச் சுட்டுகிறார். அவர், 'நினைவு, சொல், செயல் என்னும் மும்மையாலும் செம்மை போற்றும் சீராளர்' என்பார். அது,

“உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்" என்பது.

உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உள்ளானாக இருப்பவன் இறந்தவன் அல்லனே! அவன் தன்னுடலால் மறைந்தாலும், தன்னுயிரால் மறைந்தாலும் அவர் காலத்திற்குப் பின்னர் வாழ்பவர் உள்ளத்தெல்லாம் உறைந்து உணர்வித்து - உயர்வித்து - அழியா வாழ்வினனாக அல்லவோ திகழ்கிறான். உடம்பெலாம் உறையும் ஒளியாளன் -ஒளி உயிராளன் அல்லனோ அவன்!