பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை

(3355)

பற்றினேன் என்செவ்வேன் எந்தாய்’

“கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண் நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன்"

“பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெறு வயிற்றுச்

சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை

தருபலா மாமுதற் பழத்தின்

தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்”

இன்னவாறு வரும் பாடல்களைக் பெருந்தீனியர் எனலாமோ?

(3357)

(3358)

கண்டு வள்ளலார்

'தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாக் கூட்டி' என வரும் பாடல்கள் போன்றவற்றைக் கொண்டு 'பெருஞ்சுவையர்' எனப் பேசி விடலாமோ?

உலகியலில் அவ்வாறு இருப்பார் நிலைக்குத் தம்மைத் தாமே ஆட்படுத்தி அவர் பொருட்டாக அழுந்தி நின்று பாடிய அருளிரக்கப் பாடல்களே யன்றித் தம் நிலை குறித்த பாடல்கள் அல்ல எனக் கொள்ளலே வள்ளலாரை உணர்ந்தவர் கொள்ளும் சால்பாம்.

'ஒரு நாளைக்கு ஒரு வேளை ஊண்' எனக் கொண்டவர் மட்டுமல்லர் : பிறரும் அவ்வாறு கொள்ளல் நலம் எனக் கூறியவரும் வள்ளலார்.

ஒரு வேளை ஊண் என்பது, காலையில் கால்; நண்பகலில் அரை; இரவில் கால்; ஆக வேளைகள் மூன்றற்கும் கூடிச் சேர்த்து ஒரு வேளை உணவு என்பது குறித்ததாம்.

அறிவிலாச் சிறிய பருவத்தில் தானே

அருந்தலில் எனக்குள வெறுப்பைப்

பிறிவிலா தென்னுள் கலந்தநீ அறிதி’

(3393)